கோலி - அனுஷ்கா சர்மா திருமண விடியோவில் இடம்பெற்ற பாடலின் முழு வடிவம் வெளியீடு!

இந்திய கிரிக்கெட் கேப்டன் கோலி - நடிகை அனுஷ்கா சர்மா திருமண விடியோவில் இடம்பெற்ற பாடலின் முழு வடிவம் வெளியிடப்பட்டுள்ளது. 
கோலி - அனுஷ்கா சர்மா திருமண விடியோவில் இடம்பெற்ற பாடலின் முழு வடிவம் வெளியீடு!
Updated on
1 min read


இந்திய கிரிக்கெட் கேப்டன் கோலி - நடிகை அனுஷ்கா சர்மா திருமண விடியோவில் இடம்பெற்ற பாடலின் முழு வடிவம் வெளியிடப்பட்டுள்ளது. 

இந்திய கிரிக்கெட் கேப்டன் விராட் கோலியும் நடிகை அனுஷ்கா சர்மாவும் 2017-ல் இத்தாலியில் திருமணம் செய்துகொண்டார்கள். அனுஷ்கா சர்மா தற்போது கர்ப்பமாக உள்ளார்.

இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான டெஸ்ட் தொடரில் கடைசி மூன்று ஆட்டங்களில் இருந்து இந்திய கேப்டன் விராட் கோலி விலகியுள்ளார். ஜனவரியில் தன் மனைவிக்குக் குழந்தை பிறக்கவுள்ளதால் அவர் அருகில் இருக்க வேண்டும் என்பதற்காக முதல் டெஸ்ட் முடிந்த பிறகு இந்தியாவுக்குத் திரும்புகிறார்.

கோலி - அனுஷ்கா திருமண விடியோவில் இடம்பெற்ற பாடலின் டீசர், இரு வருடங்களுக்கு முன்பு வெளியிடப்பட்டது. இந்நிலையில் பீர் வி து என்கிற அப்பாடலின் முழு வடிவம் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இப்பாடலை ஹர்ஷ்தீப் கெளர், மோகன் கண்ணன் பாடியுள்ளார்கள். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com