எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

ஜெயம் ரவியின் பூமி: டிரெய்லர் வெளியானது!

ஜெயம் ரவி நடித்துள்ள பூமி படம், ஜனவரி 14 அன்று ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது... 

News image
Updated On :26 டிசம்பர் 2020, 6:44 am

DIN

ஜெயம் ரவி நடித்துள்ள பூமி படம், ஜனவரி 14 அன்று ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. இதன் டிரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது.

கோமாளி பட வெற்றிக்குப் பிறகு லக்‌ஷ்மண் இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்துள்ள படம் - பூமி. ரோமியோ ஜூலியட், போகன் ஆகிய படங்களை லக்‌ஷ்மண் இயக்கியுள்ளார். 

பூமி படத்துக்கு இசை - இமான். ஜெயம் ரவியின் ஜோடியாக நிதி அகர்வால் நடித்துள்ளார். 

பூமி, ஜெயம் ரவியின் 25-வது படம். டிக் டிக் டிக், அடங்க மறு, கோமாளி என ஹாட்ரிக் வெற்றிகளை ஜெயம் ரவி அடைந்துள்ளதால் அடுத்து வரும் அவருடைய படங்கள் மீது அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

பூமி படம் மே 1 அன்று திரையரங்குகளில் வெளியாகவிருந்த நிலையில் கரோனா அச்சுறுத்தல் மற்றும் ஊரடங்கு காரணமாக அதன் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் சூரரைப் போற்று, மூக்குத்தி அம்மன் போன்ற படங்களின் வரிசையில் பூமியும் இணைந்துள்ளது. ஜனவரி 14 அன்று ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் பூமி படம் நேரடியாக வெளியாகவுள்ளது. 

பூமி படத்தின் டிரெய்லர் இன்று வெளியிடப்பட்டுள்ளது. 

YouTube video thumbnail

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.