தேர்தலுக்கிடையே, அசாமில் காங்கிரஸ் எம்.பி. ராஜிநாமா! பாஜகவில் இணைந்தார்!தமிழகத்தில் கோடை வெப்பம் குறைய வாய்ப்பு.. அடுத்த ஒரு வாரத்திற்கு மழை!தில்லி குடியிருப்புக் கட்டடத்தில் தீ: 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலிதுரந்தர் - 2 சிறப்பு திரையிடல்: ஹிந்தி தவிர பிறமொழிக் காட்சிகள் ரத்து!பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!
/

சினிமா பைனான்சியர் அன்புச்செழியன் வீட்டில் வருமான வரித் துறையினா் சோதனை

தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் அன்புச்செழியன் வீட்டில் வருமான வரித் துறையினா் சோதனையில் ஈடுபட்டனா்.

News image
Updated On :5 பிப்ரவரி 2020, 8:59 am

DIN

தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் அன்புச்செழியன் வீட்டில் வருமான வரித் துறையினா் சோதனையில் ஈடுபட்டனா்.

திரைப்படத் தயாரிப்பாளரும் ஃபைனான்சியருமான அன்புச்செழியன், கோபுரம் பிலிம்ஸ் சார்பில் மருது, ஆண்டவன் கட்டளை, வெள்ளைக்காரத் துரை, தங்க மகன் போன்ற படங்களைத் தயாரித்துள்ளார். இதுமட்டுமல்லாமல் தமிழ்த் திரையுலகின் பைனான்சியராகவும் அவர் அறியப்படுகிறார்.  

இந்நிலையில் சென்னை தியாகராய நகரில் உள்ள அன்புச் செழியன் வீட்டில் வருமான வரித் துறையினா் சோதனையில் ஈடுபட்டனா். தமிழ் சினிமாவின் முக்கியமான பைனான்சியரான அன்புச் செழியன் வீட்டில் வருமான வரித் துறையினா் மேற்கொண்ட சோதனை, தமிழ்த் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.