கே.எல்.ராகுல் சதம் வீண்: டெல்லிக்கு எதிராக இமாலய இலக்கை துரத்திப் பிடித்த பஞ்சாப்! ராஜஸ்தானுக்கு எதிரான ஐபிஎல் ஆட்டத்தில் ஹைதராபாத் அணி முதலில் பந்துவீச்சுடெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!மக்கள் எதிர்பார்த்த விடுதலை மே 4-ல் கிடைக்கும்: நிர்மல் குமார்அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்குதிமுகவே மீண்டும் ஆட்சி; விஜய்யால் அரசியல் சூழல் மாறும்: திருமாவளவன்நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு எப்போது? என்டிஏ அறிவிப்பு
/

கணவரின் பணத்தில் படம் தயாரிக்கிறீர்களா என்கிற கேள்விக்கு நடிகை தீபிகா படுகோன் அளித்த பதில்!

உங்களுடைய தயாரிப்பு நிறுவனத்தில் கணவர் ரன்வீர் சிங் முதலீடு செய்துள்ளாரா என்று கேட்டார்.

News image
Updated On :4 ஜனவரி 2020, 10:08 am

தன்னை ஒருதலையாகக் காதலித்தவனின் காதலை ஏற்க மறுத்ததால் 15-வது வயதில் அமிலம் வீச்சுக்கு ஆளான லட்சுமி அகர்வால், தன்னம்பிக்கையுடன் போராடி அவனுக்கு சட்டத்தின் மூலம் தண்டனை வாங்கி தந்தார். இதற்காக முன்னாள் அமெரிக்க அதிபர் ஒபாமாவின் பாராட்டுதலைப் பெற்ற லட்சுமி அகர்வால், சில ஆண்டுகள் கழித்து அலோக் தீட்சித் என்பவரைக் காதலித்து ஒரு பெண் குழந்தைக்கு தாய் ஆனார். தன்னைப் போன்று அமிலம் வீச்சினால் பாதிக்கப்பட்ட பெண்களுக்காக சமீபத்தில் சண்டிகரில் சமூக அமைப்பு ஒன்றை லட்சுமி அகர்வால் துவங்கினார். 

இவரது வாழ்க்கையை அடிப்படையாக வைத்து பிரபல இயக்குநர் மற்றும் கவிஞருமான குல்சாரின் மகள் மேக்னா குல்சார் திரைப்படமொன்றை இயக்கியுள்ளார். லட்சுமி அகர்வால் வேடத்தில் பிரபல நடிகை தீபிகா படுகோன் நடித்துள்ளார். சபாக் (Chhapaak) என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியானது. சபாக், ஜனவரி 10 அன்று வெளிவரவுள்ளது. ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டூடியோஸ், மிரிகா புரொடக்‌ஷன்ஸ், தீபிகா படுகோனின் கா புரொடக்‌ஷன் ஆகிய நிறுவனங்கள் கூட்டாகத் தயாரிக்கின்றன. 

இந்நிலையில் இப்படத்தின் விழா ஒன்றில் கலந்துகொண்ட தீபிகா படுகோனிடம் செய்தியாளர் ஒருவர், உங்களுடைய தயாரிப்பு நிறுவனத்தில் கணவர் ரன்வீர் சிங் முதலீடு செய்துள்ளாரா என்று கேட்டார். இந்தக் கேள்வியில் அதிர்ச்சியான தீபிகா படுகோன், எக்ஸ்கியூஸ் மீ... இது என்னுடைய சொந்தப் பணம் என்று பதிலளித்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.