இளம் கிரிக்கெட் வீரர் ஹார்திக் பாண்டியா - நடிகை நடாஷா ஸ்டான்கோவிச் ஆகிய இருவருக்கும் சமீபத்தில் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது.
ஹிந்தி பிக் பாஸ் 8 நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகை நடாஷா, மும்பையில் வசிக்கும் செர்பியா நாட்டைச் சேர்ந்தவர். நடிப்பு வாய்ப்புக்காக 2012 முதல் இந்தியாவில் வசிக்கும் நடாஷா, சத்யாகிரஹா படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார். கிரிக்கெட் வீரர் பாண்டியாவும் நடிகை நடாஷாவும் காதலித்து வருவதாகக் கூறப்பட்டது. இந்நிலையில் புத்தாண்டன்று தனக்கு நடாஷாவுடன் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளதாக பாண்டியா அறிவித்துள்ளார். இருவருக்கும் கிரிக்கெட் வீரர்கள் பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்தார்கள்.
இந்நிலையில் ஹார்திக் பாண்டியா துபையில் திருமண நிச்சயதார்த்தம் செய்துகொண்டது குறித்து வியப்பு தெரிவித்துள்ளார் அவருடைய தந்தை ஹிமான்ஸு. ஒரு பேட்டியில் அவர் கூறியதாவது:
நடாஷா அருமையான பெண். மும்பையில் அவரைப் பலமுறை சந்தித்துள்ளோம். துபைக்கு பாண்டியாவும் நடாஷாவும் விடுமுறைக்குச் செல்கிறார்கள் எனத் தெரியும். ஆனால் அங்கு அவர்கள் திருமண நிச்சயதார்த்தம் செய்துகொள்வார்கள் என்பது தெரியாது. இது எங்களுக்கு வியப்பைத் தந்தது. எல்லாம் முடிந்தபிறகு தான் எங்களுக்குத் தெரிய வந்தது என்று கூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மது, சூதாட்ட விளம்பரங்களில் நடிக்க மாட்டேன்: ஜிவி பிரகாஷ்
ஒட்டுமொத்த மத்திய அமைச்சரவையையும் களமிறக்கி பாஜக பிரசாரம் செய்தும் பலனளிக்காது! - மமதா
கே.எல்.ராகுல் சதம் வீண்: டெல்லிக்கு எதிராக இமாலய இலக்கை துரத்திப் பிடித்த பஞ்சாப்!

போதிய பேருந்து வசதி இல்லை! 20 லட்சத்திற்கும் மேற்பட்டோர் வாக்களிக்க முடியவில்லை! - Nirmal Kumar | TVK
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


