மக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

தர்பார் படத்தை வாட்ஸ்அப்பில் பகிர்வதைத் தடுக்க வேண்டும்: லைகா நிறுவனம் புகார்

தர்பார் படம் வாட்சப் மற்றும் சமூகவலைத்தளங்களில் பகிரப்படுவதைத் தடுக்கவேண்டும் என்று...

News image
Updated On :11 ஜனவரி 2020, 10:07 am

சர்கார் படத்தையடுத்து ரஜினி நடித்துள்ள தர்பார் படத்தை ஏ.ஆர். முருகதாஸ் இயக்கியுள்ளார். இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவு - சந்தோஷ் சிவன். இசை - அனிருத். தயாரிப்பு - லைகா நிறுவனம். இது ரஜினியின் 167-வது படம். தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளிலும் தர்பார் படம் கடந்த வியாழன் அன்று வெளியானது.

இந்நிலையில் தர்பார் படம் வாட்சப் மற்றும் சமூகவலைத்தளங்களில் பகிரப்படுவதைத் தடுக்கவேண்டும் என்று லைகா பட நிறுவனம் தரப்பில் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. 

தர்பார் படம் வாட்சப்களில் பகிரப்பட்டு வருகிறது. யாரும் திரையரங்குக்குச் செல்லக்கூடாது. இதனால் தயாரிப்பாளருக்கு நஷ்டம் ஏற்பட வேண்டும் என்கிற தவறான எண்ணத்துடன் வாட்சப்களில் தர்பார் படம் பகிரப்பட்டு வருகிறது. இது சட்டப்படி தவறானது. இதனால் தயாரிப்பாளருக்கும் விநியோகஸ்தர்களுக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்று புகார் அளிக்கப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.