அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகரில் திருமணம் செய்வேன் என்று நடிகை த்ரிஷா தெரிவித்துள்ளார்.
தமிழ், தெலுங்கு, மலையாளம் என தென்னிந்திய மொழிகளில் கடந்த 10 ஆண்டுகளாக முன்னணி நாயகிகளில் ஒருவராக வலம்வருபவர் நடிகை த்ரிஷா. சமீபத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் ஜோடியாக பேட்ட படத்தில் நடித்திருந்தார். தற்போது மலையாள சூப்பர்ஸ்டார் மோகன்லால் ஜோடியாக ராம் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். ஆக்ஷன்-த்ரில்லர் வகை திரைப்படமான இதில் வனிதா என்ற மருத்துவர் கதாப்பாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில், தனது ஓய்வு நேரத்தின் போது சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமில் விரும்பிய கேள்விகளை கேட்குமாறு ரசிகர்களிடம் கோரிக்கை விடுத்தார். இதையடுத்து ரசிகர்கள் கேட்ட ஒவ்வொரு கேள்விக்கும் நகைச்சுவையுடன் பதிலளித்தார். அப்போது திருமணம் தொடர்பாக ரசிகர் கேட்டிருந்த கேள்விக்கு பதிலளித்தது அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆரவாரத்தை ஏற்படுத்தி வருகிறது.

அதில், உங்களின் விநோதமான விருப்பங்களில் ஒன்றை தெரிவிக்கவும் என்ற ரசிகரின் கேள்விக்கு, அமெரிக்காவிலுள்ள லாஸ் வேகாஸ் நகரில் திருமணம் செய்வது தான் என்று பதிலளித்துள்ளார். இதனால் அவரது திருமணம் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே மீண்டும் அதிகரித்துள்ளது.

முன்னதாக, தொழிலதிபர் வருண் மணியனுடன் கடந்த டிசம்பர், 2015-ல் திருமண நிச்சயம் செய்த சில மாதங்களில் கருத்து வேறுபாடு காரணமாக பிரிவதாக த்ரிஷா அறிவித்தார். அதுபோன்று பாகுபலி புகழ் தெலுங்கு நடிகர் ராணாவுடனும் அவ்வப்போது கிசுகிசுக்கப்பட்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

முதல்வரை மாற்றும் விவகாரம்: கட்சி முடிவுக்கு கட்டுப்படுவோம்- டி.கே.சுரேஷ்

திருச்செந்தூர், சீரடியைத் தொடர்ந்து வேளாங்கண்ணி, நாகூர் தர்கா செல்லும் விஜய்?!
விஜய்யுடன் சீரடி கோவிலுக்குச் சென்ற 2 பெண்கள் யார்?

நாட்டில் முதல்முறையாக ஏஐ அடிப்படையிலான பன்மொழி சேவைகள்: பெங்களூரு காவல்துறை அறிமுகம்!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


