பேரவைத் தோ்தலில் பதிவான வாக்குகள்: அதிகாரபூா்வ விவரம் வெளியாவதில் தாமதம் கேரளம்: புற ஊதா கதிா்வீச்சு அதிகரிப்பு! மக்கள் பாதுகாப்புடன் இருக்க அறிவுறுத்தல்!தலைமைத் தோ்தல் ஆணையரை நீக்கக்கோரி மாநிலங்களவையில் எதிா்க்கட்சிகள் புதிய நோட்டீஸ்டிசம்பரில் இருந்து சுங்கச் சாவடிகளில் இடையூறற்ற சேவை: நிதின் கட்கரி சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு: 6.68 லட்சம் மாணவா்கள் விண்ணப்பம்பேடிஎம் வங்கியின் உரிமத்தை ரத்து செய்தது ஆர்பிஐ!
/

சர்ச்சைகளில் மாட்டுவதில் நானும் கோலியும் ஒன்று: கங்கனா ரனாவத்

தானும் இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலியும் சர்ச்சைகளில் மாட்டிக்கொண்டு அதிகப் புகழை அடைந்துள்ளோம் என...

News image
Updated On :24 ஜனவரி 2020, 12:13 pm

தானும் இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலியும் சர்ச்சைகளில் மாட்டிக்கொண்டு அதிகப் புகழை அடைந்துள்ளோம் என நடிகை கங்கனா ரனாவத் கூறியுள்ளார். 

அஸ்வினி ஐயர் திவாரி இயக்கியுள்ள பங்கா என்கிற படத்தில் நடித்துள்ள கங்கனா, அதுதொடர்பான தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பேசியதாவது

எனக்கும் இந்திய கேப்டன் விராட் கோலிக்கும் நிறைய ஒற்றுமைகள் இருப்பதாகப் பலரும் சொல்லியிருக்கிறார்கள். அவர் வேறு பின்னணியில் இருந்து வந்தவர். தனக்கென்று ஒரு பெயரை உருவாக்கி அவர் மீது அன்பு செலுத்த வைத்துள்ளார்.

எனக்கும் அவருக்கும் உள்ள ஒற்றுமை - சர்ச்சைகள். அதிக சர்ச்சைகளில் மாட்டிக்கொண்டு அதிகப் புகழை அடைந்துள்ளோம். ஆக்ரோஷமான குணத்துக்காக நிறைய விமரிசனங்களை கோலி எதிர்கொண்டுள்ளார். நானும் ஆக்ரோஷமானவள் தான் என்று கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.