திமுகவில் இணைகிறாரா ‘பிக் பாஸ்' மீரா மிதுன்?
நாம் இணைந்து புதிய சகாப்தத்தைப் படைப்போம். நாம் இணைந்து வெற்றி பெறுவோம் என...


உதயநிதி ஸ்டாலினுடன் இணைந்து எடுத்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் நடிகை மீரா மிதுன்.
கடந்த வருடம் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் புகழை அடைந்த மீரா மிதுன் - 8 தோட்டாக்கள், தானா சேர்ந்த கூட்டம், போதை ஏறி புத்தி மாறி என மூன்று படங்களில் நடித்துள்ளார்.
இந்நிலையில் நடிகரும் திமுக இளைஞரணிச் செயலருமான உதயநிதி ஸ்டாலினுடன் இணைந்து எடுத்த புகைப்படத்தை ட்விட்டரில் பகிர்ந்துள்ளார் மீரா மிதுன். அத்துடன் அவர் ட்வீட் செய்ததாவது:
நாம் இணைந்து புதிய சகாப்தத்தைப் படைப்போம். நாம் இணைந்து வெற்றி பெறுவோம் என எழுதி திமுக தலைவர் ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஸ்டாலின் ஆகிய இருவரையும் டேக் செய்துள்ளார்.
இதையடுத்து திமுகவில் மீரா மிதுன் விரைவில் இணையவுள்ளார் எனச் சமூகவலைத்தளங்களில் பலரும் கருத்து தெரிவித்துள்ளார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...