தமிழகத்தில் வேட்புமனு தாக்கலுக்கு நாளை கடைசி: இதுவரை 3,413 மனுக்கள் சமா்ப்பிப்பு!தமிழகத்தில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புவானிலிருந்து வீசக்கூடிய 1,000 கிலோ வெடிகுண்டு தயாரிப்பு: மத்திய அரசு நடவடிக்கை நிலவை நெருங்கும் ‘ஆா்டெமிஸ்-2’ விண்கலம்!எழும்பூரிலிருந்து 6 விரைவு ரயில்கள் தாம்பரம் நிலையத்துக்கு மாற்றம்
/

வீரப்பன் இணையத் தொடர்: ஆதித்ய வர்மா படத் தயாரிப்பாளர் எச்சரிக்கை

இந்த நூலை முன்வைத்து எந்தவொரு படமோ இணையத் தொடரோ எடுக்கப்பட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

News image
Updated On :30 ஜூலை 2020, 1:47 pm

சந்தனக் கடத்தல் வீரப்பனைப் பற்றி முன்னாள் ஏடிஜிபி விஜயகுமார் ஐபிஎஸ், சேஸிங் தி பிரிகண்ட் என்கிற நூலை எழுதியுள்ளார். இந்த நூலை அடிப்படையாகக் கொண்டு இணையத் தொடர் ஒன்றை ஆதித்ய வர்மா படத்தைத் தயாரித்த ஈ4 என்டர்டெயின்மெண்ட் உருவாக்கவுள்ளது. 

இதுபற்றி அந்த நிறுவனம் ட்விட்டரில் தெரிவித்துள்ளதாவது:

படம், இணையத் தொடர் எடுப்பதற்காக விஜயகுமார் ஐபிஎஸ் எழுதிய சேஸிங் தி பிரிகண்ட் நூலின் உரிமையை நாங்கள் பெற்றுள்ளோம். இந்த நூலை முன்வைத்து எந்தவொரு படமோ இணையத் தொடரோ எடுக்கப்பட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். ஊரடங்குக் காலம் முடிந்த பிறகு இணையத் தொடருக்கான படப்பிடிப்பு ஆரம்பமாகும் என்று கூறப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.