ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்
/

தமிழில் நடிக்க அழைக்கும் ரசிகர்கள்: உருகும் பிரபல நடிகை

முகமூடி படம் மூலம் திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமான பூஜா ஹெக்டே, அதன்பிறகு ஹிந்தி, தெலுங்குப் படங்களில் தொடர்ந்து நடித்துவருகிறார்.

News image
Updated On :3 மார்ச் 2020, 8:45 am

DIN

ஏற்கெனவே மிஷ்கின் இயக்கிய முகமூடி படத்தில் நடித்தாலும், தமிழ்ப் படங்களில் மீண்டும் நடிக்கவேண்டும் என்று நடிகை பூஜா ஹெக்டேவுக்கு ரசிகர்கள் ட்விட்டர் வழியாக வேண்டுகோள் விடுத்துள்ளார்கள்.

முகமூடி படம் மூலம் திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமான பூஜா ஹெக்டே, அதன்பிறகு ஹிந்தி, தெலுங்குப் படங்களில் தொடர்ந்து நடித்துவருகிறார். சமீபத்தில் அவர் நடித்த தெலுங்குப் படங்கள் சூப்பர் ஹிட் ஆகியுள்ளதால் அங்கு அவருக்கு வரவேற்பு அதிகமாக உள்ளது. ஆனாலும் தமிழில் நடிக்க வேண்டும் என்று அவரிடம் தமிழ் ரசிகர்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகிறார்கள். இதற்கு மதிப்பளித்து ட்விட்டரில் அவர் கூறியதாவது:

நான் தமிழ்ப் படங்களில் நடிக்கவேண்டும் என்கிற ரசிகர்களின் கோரிக்கையைப் படித்து வருகிறேன். இது எனக்கு ஆச்சரியமாக உள்ளது. மனத்தைத் தொடுகிறது. தமிழ்ப் படங்களில் நடிக்க நான் முயன்று வருகிறேன் என்பதை உறுதியாகக் கூறுகிறேன். நல்ல கதை அமைவதற்காகக் காத்திருக்கிறேன். அதனால் இந்த இடைவெளியும் தாமதமும் ஏற்பட்டுள்ளது. விரைவில் என்னைத் தமிழ்ப் படங்களில் பார்க்கலாம் என்று கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.