பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

வருங்கால மனைவிக்கு ஆதரவாகப் பேசும் சிம்பு: குவியும் பாராட்டுகள்

தனது வருங்கால மனைவிக்கு ஆதரவாக சிம்பு பேசியதற்கு ரசிகர்களும் திரையுலகினரும் பாராட்டு தெரிவித்துள்ளார்கள்.

News image
Updated On :15 மே 2020, 7:52 am

DIN

நடிகர் சிம்பு சமையல் செய்யும் இரு விடியோக்கள் வெளியாகியுள்ளன. இதில் தனது வருங்கால மனைவிக்கு ஆதரவாக சிம்பு பேசியதற்கு ரசிகர்களும் திரையுலகினரும் பாராட்டு தெரிவித்துள்ளார்கள்.

நடிகர் விடிவி கணேஷுடன் சமையல் செய்துகொண்டே சிம்பு உரையாடும் விடியோ ஒன்று வெளியாகியுள்ளது. வர்ற போற பெண்ணுக்கு வேலையே இல்லாம பண்ணிடுவீங்க போலயே என விடிவி கணேஷ் சிம்புவிடம் கேட்கிறார். அதற்கு சிம்பு பதில் அளித்ததாவது:

என்னைக் கல்யாணம் செய்து கொண்டு வரும் பெண், வேலை செய்யவா வர்றாங்க. அவங்க என்ன வேலைக்காரங்கனு நினைச்சீங்களா? அதெல்லாம் உங்க காலம். பெண்களை வேலைக்காரி மாதிரி நடத்தக்கூடாது. அவர்கள் விரும்பினால் சமையல் செய்யலாம். என் மனைவி சந்தோஷமாக இருக்கவேண்டும் என்றுதான் நான் நினைப்பேன் என்று சிம்பு அந்த விடியோவில் பேசியுள்ளார்.

வருங்கால மனைவிக்கு ஆதரவாக சிம்பு பேசியிருப்பதற்கு ரசிகர்களும் திரையுலகினரும் பாராட்டு தெரிவித்துள்ளார்கள். சிம்புவின் மனைவியைப் பார்க்கவேண்டும் போல் உள்ளது என நடிகை பிந்து மாதவி தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் கூறியுள்ளார். இதுதவிர ஊரடங்கு காலத்தில் சிம்பு தனது வீட்டில் சமையல் செய்யும் மற்றொரு விடியோவும் வெளியாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.