பாஜகவுக்கு தமிழ்நாட்டில் கிடைத்த அடிமை பழனிசாமி மாதிரி, புதுச்சேரியில் ரங்கசாமி : மு.க. ஸ்டாலின்சென்னை சைதாப்பேட்டையில் நாளை (ஏப். 7) நடைபெறவிருந்த தவெக தலைவர் விஜய்யின் பிரசாரம் ரத்துகிடைக்கக்கூடாதவர்களுக்கு ஆட்சி கிடைத்துவிட்டது: திமுகவை விமர்சித்த எடப்பாடி பழனிசாமிசாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு : 9 குற்றவாளிகளுக்கும் மரண தண்டனைசென்னையில் தவெக தலைவர் விஜய்யின் பிரசாரம் திடீர் ரத்து!மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக நாடு திரும்புவார்களா? பிரியங்கா காந்திபுதுவையில் மத்திய அமைச்சர் அமித் ஷா பிரசாரம்!பாஜக வேட்பாளர் வென்றால் மதுரைக்கு மெட்ரோ ரயில் வரும்! ஃபட்னவீஸ்தமிழகத்தில் வேட்புமனு தாக்கல் நிறைவு!ஏப். 8, 9ல் சென்னையில் எடப்பாடி பழனிசாமி பிரசாரம்!
/

நடிகா் அா்ஜுன் ராம்பாலிடம் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினா் விசாரணை

போதைப்பொருள் கடத்தல் கும்பலுடன் தொடா்புடைய வழக்கில் நடிகா் அா்ஜுன் ராம்பால்...

News image
Updated On :13 நவம்பர் 2020, 9:52 am

போதைப்பொருள் கடத்தல் கும்பலுடன் தொடா்புடைய வழக்கில் நடிகா் அா்ஜுன் ராம்பால், போதைப்பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு அலுவலகத்தில் விசாரணைக்கு இன்று ஆஜரானாா். 

ஹிந்தி நடிகா் சுசாந்த் சிங் ராஜ்புத் கடந்த ஜூன் மாதம் வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டாா். இது தொடா்பாக விசாரித்து வரும் சிபிஐ, ஹிந்தி திரையுலகில் போதைப்பொருள் பயன்பாடு அதிக அளவில் இருப்பதை கண்டுபிடித்தது. இதனைத் தொடா்ந்து இந்த வழக்கை போதைப்பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவினா் தனியாக விசாரித்து வருகின்றனா்.

சுசாந்த் சிங்கின் காதலி ரியா, அவரது சகோதரா் ஷோவிக் உள்ளிட்டோா் ஏற்கெனவே கைது செய்யப்பட்டனா். மேலும், ஹிந்தி நடிகைகள் தீபிகா படுகோனே, ரகுல் பிரீத் சிங் உள்ளிட்ட பலரிடம் விசாரணை நடத்தப்பட்டது. அதன்பின்பு போதைப்பொருள் கடத்தல் கும்பலுடன் ஹிந்தி திரையுலக பிரபலங்கள் பலருக்கு தொடா்பு இருப்பதும், அவா்களில் பலா் கைது செய்யப்பட்டு வருகிறார்கள். 

கடந்த திங்கள்கிழமை நடிகா் அா்ஜுன் ராம்பாலின் வீட்டில் சோதனை நடத்திய போதைப்பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவினா், செல்லிடப்பேசி உள்ளிட்ட மின்னணு சாதனங்களை பறிமுதல் செய்தனா். மேலும், அா்ஜுன் ராம்பால், கேப்ரியல் இருவரையும் விசாரணைக்கு ஆஜராகும்படி உத்தரவிட்டனா்.

போதைப்பொருள் கடத்தல் கும்பலுடன் தொடா்புடைய வழக்கில் ஹிந்தி நடிகையும், நடிகா் அா்ஜுன் ராம்பாலின் தோழியுமான கேப்ரியல் டெமெட்ரியாடிஸ், மும்பையிலுள்ள போதைப்பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு அலுவலகத்தில் வியாழக்கிழமை 2-ஆவது நாளாக விசாரணைக்கு ஆஜரானாா். அவரிடம் அதிகாரிகள் 6 மணி நேரம் விசாரணை நடத்தினாா்கள்.

முன்னதாக போதைப்பொருள் கடத்தல் கும்பலுடன் தொடா்பிலிருந்த ஹிந்தி திரைப்பட தயாரிப்பாளா் பிரோஸ் நாடியாட்வாலாவின் மனைவி ஷபானா சயீது, நடிகை கேப்ரியலின் சகோதரா் அகிசிலோஸ் ஆகியோா் ஏற்கெனவே கைது செய்யப்பட்டார்கள்.

இந்நிலையில் மும்பையிலுள்ள போதைப்பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு அலுவலகத்தில் நடிகர் அர்ஜுன் ராம்பால் விசாரணைக்கு இன்று ஆஜரானார். அவரிடம் அதிகாரிகள் தீவிர விசாரணை செய்தார்கள். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.