ஜன. 13ல் மாஸ்டர் திரைப்படத்தை வெளியிட படக்குழு திட்டம்?

மாஸ்டர் திரைப்படத்தை வருகிற ஜனவரி 13 ஆம் தேதி வெளியிட படக் குழு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 
மாஸ்டர்
மாஸ்டர்

விஜய் நடித்துள்ள மாஸ்டர் திரைப்படத்தை வருகிற ஜனவரி 13 ஆம் தேதி வெளியிட படக் குழு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

விஜய், விஜய் சேதுபதி நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள மாஸ்டர் திரைப்படம் கடந்த ஏப்ரல் மாதம் வெளியாகவிருந்தது. ஆனால், கரோனா பொது முடக்கம் காரணமாக படம் வெளியிடப்படவில்லை. 

இதனிடையே படம் ஓடிடியில் வெளியாகும் என சில தகவல்கள் பரவி வந்த நிலையில் நேற்று படக்குழு ஒரு அறிக்கையை வெளியிட்டு வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தது. மாஸ்டர் படத்தை திரையரங்குகளில் வெளியிடவே நாங்கள் விரும்புகிறோம் என்று கூறியிருந்தது. 

இந்நிலையில், மாஸ்டர் திரைப்படம் பொங்கலுக்கு வெளியாக இருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. 2021 ஜனவரி 13 ஆம் தேதி படத்தை வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், இதுகுறித்த அதிகாரபூர்வ தகவல் இன்னும் வெளியாகவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com