இயக்குநராக அறிமுகமாகும் நடிகை வரலக்‌ஷ்மி சரத்குமார்

இயக்குநராக அறிமுகமாகும் நடிகை வரலக்‌ஷ்மி சரத்குமார்

மெர்சல் படத்துக்குப் பிறகு தேனாண்டாள் பிலிம்ஸ் இப்படத்தைத் தயாரிக்கிறது.
Published on

2012-ல் போடா போடி படத்தின் மூலமாகத் திரையுலகில் அறிமுகமானார் பிரபல நடிகர் சரத்குமாரின் மகளான வரலக்‌ஷ்மி. தாரை தப்பட்டை, விக்ரம் வேதா, சண்டகோழி 2, சர்கார், மாரி 2 எனப் பல படங்களில் அவர் நடித்துள்ளார். 

இந்நிலையில் கண்ணாமூச்சி என்கிற படத்தின் மூலமாக இயக்குநராக அறிமுகமாகிறார் வரலக்‌ஷ்மி சரத்குமார். இப்படம் பற்றிய அறிவிப்பும் முதல் தோற்ற போஸ்டரும் வெளியாகியுள்ளன. கதாநாயகிக்கு முக்கியத்துவம் தரும் வேடத்தில் வரலக்‌ஷ்மி நடிக்கிறார். 

மெர்சல் படத்துக்குப் பிறகு தேனாண்டாள் பிலிம்ஸ் இப்படத்தைத் தயாரிக்கிறது. இசை - சாம் சிஎஸ். ஒளிப்பதிவு - ஈ. கிருஷ்ண சாமி. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com