கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நடிகர் ராஜசேகரின் உடல்நிலை குறித்து மகள் ஷிவாத்மிகா தகவல்
அவர் உடல்நிலை கவலைக்கிடமாக இல்லை. சீராக உள்ளது...


தெலுங்குத் திரையுலகின் முன்னணி நடிகரான ராஜசேகருக்கு கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அவருடைய உடல்நிலை குறித்த தகவலை அவருடைய மகள் தெரிவித்துள்ளார்.
தனக்கு மனைவி ஜீவிதாவுக்கும் கரோனா வைரஸ் தொற்று உறுதியானதை சில நாள்களுக்கு முன்பு அறிவித்தார் பிரபல நடிகர் ராஜசேகர். இந்நிலையில் தனது தந்தையின் உடல்நிலை குறித்து ராஜசேகரின் மகள் ஷிவாத்மிகா ட்விட்டரில் கூறியதாவது:
என் தந்தை கரோனாவுடன் தீவிரமாகப் போராடி வருகிறார். உங்களுடைய பிரார்த்தனைகளும் அன்பும் எங்களைக் காப்பாற்றும். அவர் விரைவில் குணமாக வேண்டும் என அனைவரும் பிரார்த்தனை செய்யுங்கள்.
அவர் உடல்நிலை கவலைக்கிடமாக இல்லை. சீராக உள்ளது. உடல்நலம் முன்னேறி வருகிறார். உங்கள் அனைவரின் பிரார்த்தனைகள் எங்களுக்குத் தேவை. தவறான செய்திகளைப் பரப்ப வேண்டாம் என்று கூறியுள்ளார்.
அமிதாப் பச்சன், அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யா ராய், ராஜமெளலி, அர்ஜுன் கபூர், மலைகா அரோரா, தமன்னா, ஜெனிலியா போன்ற திரையுலகப் பிரபலங்கள் பலரும் கரோனாவால் பாதிக்கப்பட்டு தற்போது அதிலிருந்து மீண்டு வந்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...