சூர்யா நடித்துள்ள சூரரைப் போற்று: டிரெய்லர் வெளியீடு
சூரரைப் போற்று படத்தின் டிரெய்லர் இன்று வெளியாகியுள்ளது.


சூர்யா நடித்துள்ள சூரரைப் போற்று படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது.
இறுதிச்சுற்று சுதா கொங்கராவின் அடுத்த படமான சூரரைப் போற்று படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார் சூர்யா. இது அவருடைய 38-வது படம்.
கதாநாயகியாக மலையாள நடிகை அபர்ணா முரளி நடித்துள்ளார். எட்டு தோட்டாக்கள், சர்வம் தாளமயம் ஆகிய தமிழ்ப்படங்களில் இவர் நடித்துள்ளார். இப்படத்துக்கு இசை - ஜி.வி. பிரகாஷ். ஒளிப்பதிவு - நிகேத் பொம்மிரெட்டி.
சூரரைப் போற்று படம் திட்டமிட்டபடி அக்டோபர் 30 அன்று வெளியாவதில் ஒரு சிக்கல் ஏற்பட்டது. விமானம் தொடர்பான கதை என்பதால் இந்திய விமானத்துறையிடமிருந்து அனுமதி வாங்கிய பிறகுதான் படத்தை ஓடிடியில் வெளியிடமுடியும். இதனால் படத்தின் வெளியீட்டில் தாமதம் ஏற்படுவதாக சூர்யா தெரிவித்தார்.
தற்போது, சூரரைப் போற்று படத்துக்குத் தடையில்லாச் சான்றிதழ் கிடைத்துள்ளது. மேலும் இப்படம் தீபாவளிக்கு அமேசான் பிரைமில் வெளியாகவுள்ளது.
இந்நிலையில் சூரரைப் போற்று படத்தின் டிரெய்லர் இன்று வெளியாகியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...