நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

ஆபாச உடை அணிந்து உடற்பயிற்சி செய்ததாகப் பூங்காவில் தாக்கப்பட்ட கோமாளி பட நடிகை

பூங்காவில் உடற்பயிற்சி செய்துகொண்டிருந்தபோது தன்னைச் சிலர் தாக்கியதாக நடிகை பூஜா ஹெக்டே கூறியுள்ளார்.

News image
Updated On :5 செப்டம்பர் 2020, 9:15 am

DIN

பெங்களூர் பூங்காவில் உடற்பயிற்சி செய்துகொண்டிருந்தபோது தன்னைச் சிலர் தாக்கியதாக நடிகை பூஜா ஹெக்டே கூறியுள்ளார்.

பெங்களூர் அகாரா ஏரியில் உள்ள பூங்கா ஒன்றில் தனது தோழிகளுடன் இணைந்து நேற்று உடற்பயிற்சி செய்துள்ளார் நடிகை பூஜா ஹெக்டே. ஜெயம் ரவி நடித்த கோமாளி படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார்.

பூங்காவில் உடற்பயிற்சி செய்துகொண்டிருந்தபோது கவிதா ரெட்டி என்கிற ஒரு பெண்மணியும் சில ஆண்களும் சம்யுக்தாவையும் அவருடைய தோழிகளையும் கடுமையான வார்த்தைகளால் திட்டி, தாக்கியுள்ளார்கள். 

உடற்பயிற்சி செய்வதற்காகத் தாங்கள் அணிந்திருந்த உடை ஆபாசமாக இருந்ததாகவும் போதைப் பொருளைப் பயன்படுத்தியதாகவும் தன் மீது அவர்கள் குற்றம் சுமத்தியதாக சம்யுக்தா ஹெக்டே கூறியுள்ளார். காவல்துறைக்கு கவிதா ரெட்டி புகார் அளித்ததால் உடனடியாகச் சம்பவ இடத்துக்குக் காவலர்கள் வந்துள்ளார்கள். சம்யுக்தாவையும் அவருடைய தோழிகளையும் பூங்காவை விட்டு வெளியேறுமாறு காவலர்கள் கூறியுள்ளார்கள். எனினும் பூங்காவின் கதவை கவிதா ரெட்டியும் அவருடன் இருந்தவர்களும் பூட்டிவிட்டார்கள். சம்யுக்தாவைக் காவல் நிலையத்துக்கு அழைத்துச் செல்ல வேண்டும், அவர் மீது நாங்கள் புகார் அளிக்கிறோம் என்று கூறியுள்ளார்கள். 

தங்களை வெளியே விட மறுத்ததால் கதவைத் திறக்க சம்யுக்தா முயன்றுள்ளார். அப்போது ஒருவர் சம்யுக்தாவின் கையில் தாக்கியுள்ளார். சம்யுக்தாவும் அவருடைய தோழிகளும் எந்தத் தவறும் செய்யவில்லை என்று கூறி காவலர்கள் சம்யுக்தா பூங்காவை விட்டு வெளியே செல்ல அனுமதி அளித்துள்ளார்கள். இதன்பிறகு இரு தரப்பும் காவல் நிலையம் சென்று புகார் அளித்துள்ளது.

இச்சம்பவம் பற்றி கண்ணீருடன் இன்ஸ்டகிராமில் விடியோ வெளியிட்டுள்ளார் சம்யுக்தா ஹெக்டே. பூங்காவில் தாங்கள் அணிந்த உடை என்ன என்பதையும் விடியோவில் அவர் விளக்கியுள்ளார். உடற்பயிற்சி உடையை அணிந்ததற்காக எங்களை மிகவும் கேவலமாகப் பேசி தாக்கியுள்ளார்கள். இதுபோன்ற அத்துமீறல்கள் நிறுத்தப்படவேண்டும் என்று கூறியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.