

கோமாளி பட வெற்றிக்குப் பிறகு லக்ஷ்மண் இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்து வரும் படம் - பூமி. ரோமியோ ஜூலியட், போகன் ஆகிய படங்களை லக்ஷ்மண் இயக்கியுள்ளார்.
பூமி படத்துக்கு இசை - இமான். ஜெயம் ரவியின் ஜோடியாக நித்தி அகர்வால் நடித்துள்ளார்.
பூமி, ஜெயம் ரவியின் 25-வது படம். டிக் டிக் டிக், அடங்க மறு, கோமாளி என ஹாட்ரிக் வெற்றிகளை ஜெயம் ரவி அடைந்துள்ளதால் அடுத்து வரும் அவருடைய படங்கள் மீது அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
பூமி படம் மே 1 அன்று வெளியாகவிருந்த நிலையில் அதன் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
ஜெயம் ரவியின் பிறந்த நாளான இன்று இப்படத்தில் இடம்பெற்றுள்ள தமிழன் என்று சொல்லடா பாடல் வெளியிடப்பட்டுள்ளது. மதன் கார்க்கி எழுதியுள்ள பாடலை அனிருத், லாவண்யா, இமான் ஆகியோர் பாடியுள்ளார்கள்.
சூர்யா நடித்துள்ள சூரரைப் போற்று அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளதால் பூமி படமும் ஓடிடியில் வெளியாகும் எனச் செய்திகள் வந்தன. ஆனால் பட இயக்குநர் லக்ஷ்மண் இதை மறுத்துள்ளார். ஒரு பேட்டியில் அவர் கூறியதாவது: படப்பிடிப்பை முடிக்க இன்னும் ஐந்து நாள்கள் தேவைப்படுகின்றன. இதுவரை படமாக்கப்பட்ட காட்சிகளின் எடிட்டிங், டப்பிங் பணிகள் முடிவடைந்துள்ளன. எனவே ஓடிடியில் பூமி படம் வெளியாகும் எனச் சொல்வது தவறு என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.