பிரபல நடிகை ஆலியா பட்டுக்கு கரோனா பாதிப்பு
கரோனாவால் நான் பாதிக்கப்பட்டுள்ளேன். உடனடியாக வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன்.


பிரபல நடிகை ஆலியா பட், கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்.
இயக்குநர் மகேஷ் பட்டின் மகளான ஆலியா பட், 2012-ல் கரண் ஜோஹர் ஸ்டூடண்ட் ஆஃப் தி இயர் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். 2 ஸ்டேட்ஸ், டியர் ஜிந்தகி, ஹைவே, உத்தா பஞ்சாப், ராஸி, கல்லி பாய் போன்ற படங்களில் நடித்துப் புகழ் பெற்றார்.
இந்நிலையில் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார் ஆலியா பட். இதுபற்றி அவர் கூறியதாவது:
கரோனாவால் நான் பாதிக்கப்பட்டுள்ளேன். உடனடியாக வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். மருத்துவர்களின் அறிவுரையின் பேரில் அனைத்து வழிமுறைகளையும் பின்பற்றி வருகிறேன். அனைவருடைய அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...