ரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

மாதவன் நடித்து இயக்கியுள்ள ராக்கெட்ரி: டிரெய்லர் வெளியீடு

தமிழரான நம்பி நாராயணன், நெல்லை மாவட்டம் ஏர்வாடியைச் சேர்ந்தவர்.

News image
Updated On :2 ஏப்ரல் 2021, 5:01 am

DIN

ஆங்கிலம், ஹிந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் என ஐந்து மொழிகளில் வெளியாகவுள்ள ராக்கெட்ரி - நம்பி விளைவு (Rocketry - The Nambi Effect) படத்தில் கதாநாயகான நடித்தது மட்டுமல்லாமல் இயக்கியும் உள்ளார் மாதவன். இந்தப் படத்தில் சிம்ரன் நடித்துள்ளார். பின்னணி இசை - சாம் சி.எஸ்.

இஸ்ரோ விஞ்ஞானியாக பணியாற்றிய நம்பி நாராயணனின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு இந்தப் படம் உருவாக்கப்பட்டுள்ளது. தமிழரான நம்பி நாராயணன், நெல்லை மாவட்டம் ஏர்வாடியைச் சேர்ந்தவர்.

இஸ்ரோ விஞ்ஞானியாகப் பணியாற்றிய நம்பி நாராயணன், வெளிநாட்டுக்கு உளவு பார்த்ததாகக் குற்றம்சாட்டப்பட்டு கடந்த 1994ஆம் ஆண்டில் கைது செய்யப்பட்டார். எனினும், நம்பி நாராயணன் மீது பொய் குற்றச்சாட்டு தெரிவிக்கப்பட்டிருப்பதாக தெரிவித்து, வழக்கில் இருந்து அவரை சிபிஐ விடுவித்தது. இதைத் தொடர்ந்து, உச்ச நீதிமன்றத்தில் நம்பி நாராயணன் வழக்குத் தொடுத்தார். அந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், நம்பி நாராயணனுக்கு 8 வாரத்துக்குள் ரூ.50 லட்சம் இழப்பீடு அளிக்க வேண்டும் என்று கேரள அரசுக்கு உத்தரவிட்டது. அவர் மீதான கைது நடவடிக்கை தேவையற்றது என உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.  எனினும் இதன்படி, ரூ.50 லட்சம் இழப்பீட்டு தொகையை நம்பி நாராயணனுக்கு கேரள அரசு வழங்கியுள்ளது. 

இந்நிலையில் ராக்கெட்ரி - நம்பி விளைவு படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது.

YouTube video thumbnail

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.