திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

96 நடிகை கெளரிக்கு கரோனா பாதிப்பு

சமீபத்தில் கர்ணன் பாடல் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட கெளரி கிஷன்...

News image
Updated On :3 ஏப்ரல் 2021, 7:50 am

DIN

96 படத்தில் நடித்த கெளரி கிஷன், கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளார்.

2018-ல் வெளியான 96 படத்தின் மூலம் திரையுலகில் நடிகையாக அறிமுகமானார் கேரளாவைச் சேர்ந்த கெளரி கிஷன். ஜானு கதாபாத்திரத்தின் பள்ளி மாணவியாக நடித்து ரசிகர்களின் பாராட்டைப் பெற்றார். இதன்பிறகு தமிழில் மாஸ்டர், கர்ணன் படங்களில் நடித்துள்ளார்.

சமீபத்தில் கர்ணன் பாடல் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட கெளரி கிஷன், தற்போது கரோனா வைரஸால் தான் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல் தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது:

நான் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளேன். கடந்த ஒரு வாரமாக வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டுள்ளேன். மருத்துவர்களின் அறிவுரையைப் பின்பற்றி வருகிறேன். உடல்நலம் தேறி வருவதால் கவலைப்பட ஒன்றுமில்லை. அதுவரை நன்கு ஓய்வெடுத்து உங்களுடைய வாழ்த்துகளைப் படித்து வருவேன் என்று கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.