திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

இளம் நடிகைக்கு கரோனா பாதிப்பு

முகக்கவசம் அணிந்தேன், சமூக இடைவெளியைக் கடைப்பிடித்தேன், கைகளை நன்கு கழுவினேன்...

News image
படம் - instagram.com/aishu__/
Updated On :10 ஏப்ரல் 2021, 6:21 am

DIN

இளம் நடிகை ஐஸ்வர்யா லக்‌ஷ்மிக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

கேரளாவைச் சேர்ந்த நடிகை ஐஸ்வர்யா லக்‌ஷ்மி, 2017 முதல் படங்களில் நடித்து வருகிறார். விஷால் நடித்த ஆக்‌ஷன் படத்தில் நடித்த ஐஸ்வர்யா லக்‌ஷ்மி, அடுத்ததாக மணி ரத்னம் இயக்கி வரும் பொன்னியின் செல்வன் படத்தில் நடித்து வருகிறார். தனுஷ் நடித்த ஜகமே தந்திரம் படத்திலும் நடித்துள்ளார்.

இந்நிலையில் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள ஐஸ்வர்யா லக்‌ஷ்மி, இன்ஸ்டகிராமில் கூறியதாவது:

நான் முகக்கவசம் அணிந்தேன், சமூக இடைவெளியைக் கடைப்பிடித்தேன், கைகளை நன்கு கழுவினேன். பரிந்துரைத்த அத்தனையையும் செய்தேன். எனினும் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளேன். தற்போது அதற்குத் தேவையான மருந்துகளையும் உணவுகளையும் உண்டு வருகிறேன். பால்கனியில் நின்றுகொண்டு என் பெற்றோருடன் உரையாடுகிறேன். அனைவரும் முகக்கவசம் அணிந்து பாதுகாப்பாக இருங்கள். இதை லேசாக எடுத்துக்கொள்ள வேண்டாம் என்றார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.