சிவாஜி படப்பிடிப்பில் மறக்க முடியாத நாள்கள்: விவேக் மறைவுக்கு ரஜினி இரங்கல்

அவருடன் நடித்த ஒவ்வொரு நாள்களும் என் வாழ்க்கையில் மறக்க முடியாத நாள்கள்.
சிவாஜி படப்பிடிப்பில் மறக்க முடியாத நாள்கள்: விவேக் மறைவுக்கு ரஜினி இரங்கல்
Updated on
1 min read

நடிகர் விவேக்கின் மறைவுக்கு ரஜினிகாந்த் இரங்கல் தெரிவித்துள்ளார். 

மாரடைப்பால் சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நடிகர் விவேக் இன்று அதிகாலை 4.35 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். விவேக்கின் மறைவுக்குத் திரையுலகினரும் ரசிகர்களும் இரங்கல் தெரிவித்துள்ளார்கள்.

விவேக்கின் மறைவுக்கு நடிகர் ரஜினிகாந்த் இரங்கல் தெரிவித்துள்ளார். ட்விட்டரில் அவர் கூறியதாவது:

சின்ன கலைவாணர், சமூக சேவகர், என்னுடைய நெருங்கிய இனிய நண்பர் விவேக் அவர்களுடைய மறைவு வேதனை அளிக்கிறது. சிவாஜி படப்பிடிப்பில் அவருடன் நடித்த ஒவ்வொரு நாள்களும் என் வாழ்க்கையில் மறக்க முடியாத நாள்கள். அவரைப் பிரிந்து வாடும் அவருடைய குடும்பத்தாருக்கு என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள். விவேக்கின் ஆத்மா சாந்தி அடையட்டும் என்றார்.  
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com