ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கைஅல்-காய்தா, ஐஎஸ் அமைப்புகளுக்கு எதிராக கூட்டு நடவடிக்கை: ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்தல்பல்வேறு துறைகளைச் சோ்ந்த ஆளுமைகளுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று கலந்துரையாடல்சீனாவின் பாதுகாப்பு பட்ஜெட் 7% உயா்வுமத்திய கிழக்கு போா் : இந்தியாவில் யூரியா உற்பத்தி சரிவு: உர விலை உயரும் அபாயம்?
/

நம்ப முடியவில்லை: விவேக் மறைவுக்கு ஏ.ஆர். ரஹ்மான் இரங்கல்

நீங்கள் எங்கள் விட்டுப் பிரிந்ததை நம்பமுடியவில்லை.

News image
Updated On :17 ஏப்ரல் 2021, 1:54 am

DIN

பிரபல நகைச்சுவை நடிகர் விவேக்கின் மறைவுக்கு இசையமைப்பாளர் ஏ.ஆர், ரஹ்மான் இரங்கல் தெரிவித்துள்ளார்.

மாரடைப்பால் சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நடிகர் விவேக் இன்று அதிகாலை 4.35 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். விவேக்கின் மறைவுக்குத் திரையுலகினரும் ரசிகர்களும் இரங்கல் தெரிவித்துள்ளார்கள்.

பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் ட்விட்டரில் கூறியதாவது:

நீங்கள் எங்கள் விட்டுப் பிரிந்ததை நம்பமுடியவில்லை. உங்கள் ஆன்மா சாந்தியடையட்டும். பல வருடங்களாக எங்களைச் சிரிக்க வைத்தீர்கள். உங்களுடைய சாதனைகள் எப்போதும் எங்களின் நினைவுகளில் இருக்கும் என்று கூறியுள்ளார்.  

கடந்த ஏப்ரல் 11 அன்று ரஹ்மானைப் பாராட்டி விவேக் ட்வீட் வெளியிட்டிருந்தார். அதில் அவர் கூறியதாவது:

தன் நிலை உயரும் போது பணிவு வரவேண்டும். இதை ரஹ்மான் அவர்களிடம் கற்றுக் கொள்ள வேண்டும்! ஞானமும் அடக்கமும் சேர்ந்தால் உன்னதம். அதுவே இசைப்புயல் என்றார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.