குழந்தையின் புகைப்படத்தை பகிர்ந்த பிரபல சின்னத்திரை நடிகை ஸ்ரீதேவி - குவியும் வாழ்த்து

பிரபல சின்னத்திரை நடிகை ஸ்ரீதேவி அசோக் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது குழந்தைக்கு பெயர் சூட்டும் விழாவின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.
Sridevi Ashok Shares her daughter's photo on instagram
Sridevi Ashok Shares her daughter's photo on instagram
Published on
Updated on
1 min read

பிரபல சின்னத்திரை நடிகை ஸ்ரீதேவி அசோக் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது குழந்தைக்கு பெயர் சூட்டும் விழாவின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். 

திரைப்படங்களுக்கு நிகராக சின்னத்திரை நடிகர், நடிகைகளுக்கெனறு தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. கல்யாணம், குழந்தை பிறப்பு போன்ற அவர்கள் வீடுகளில் நடக்கும் முக்கிய நிகழ்வுகளில் ரசிகர்கள் தங்களது வீட்டு நிகழ்ச்சி போல கொண்டாடி வருகின்றனர். 

அந்த வகையில் சன் டிவியில் ஒளிபரப்பான 'வாணி ராணி', 'கல்யாண பரி'சு, 'தங்கம்', 'இளவரசி' போன்ற சீரியல்களில் நடித்து புகழ் பெற்றவர் ஸ்ரீதேவி அசோக். இவர் 'புதுக்கோட்டையில் இருந்து சரவணன்', 'கிழக்கு கடற்கரை சாலை' போன்ற படங்களிலும் நடித்துள்ளார். இவருக்கும் அசோக் என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது. 

இந்த நிலையில் கர்ப்பமாக இருந்த அவருக்கு சமீபத்தில் பெண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு இன்று (ஞாயிற்றுக்கிழமை) பெயர் சூட்டும் விழா நடைபெற்றது. இதனையடுத்து தனது குழந்தையின் புகைப்படத்தை பகிர்ந்த ஸ்ரீதேவி, தனது மகளுக்கு சித்தாரா என்று பெயரிட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.  இந்தப் பெயருக்கு நட்சத்திரம் என்று பொருள் உள்ளதை சுட்டிக்காட்டியுள்ளார். பெயருக்கேற்றார் போல் நட்சத்திரம் போல் ஜொலிக்க தினமணி சார்பில் வாழ்த்துகள். 

ஸ்ரீதேவி கடைசியாக சன் டிவியில் ஒளிபரப்பான பூவே உனக்காக தொடரிலும், விஜய் டிவியில் ஒளிபரப்பான காற்றுக்கென்ன வேலி தொடரிலும் நடித்து வந்தார். விரைவில் அவர் சின்னத்திரை தொடர்களில் மீண்டும் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com