
நடிகை குஷ்புவும், நடிகர் வையாபுரியும் ஜி தமிழில் ஒளிபரப்பாகும் கோகுலத்தில் சீதை தொடரில் சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளார்கள்.
நீண்ட இடைவேளைக்கு பிறகு ரஜினிகாந்த்துடன் அண்ணாத்த படத்தில் நடிகை குஷ்பு நடித்து வருகிறார். இருவரும் இணைந்து நடித்த தர்மத்தின் தலைவன், அண்ணாமலை, மன்னன் போன்ற படங்கள் பெரும் வெற்றி பெற்ற படங்கள் என்பதால் அண்ணாத்த படத்தை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.
தீவிர அரசியலில் ஈடுபட்டு வரும் நடிகை குஷ்பு திரைப்படங்களில் குறைவாகவே நடித்து வருகிறார். இந்த நிலையில் அவர் ஜி தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் கோகுதலத்தில் சீதை என்ற தொடரில் சிறப்பு வேடத்தில் நடித்துள்ளார். இந்தத் தொடரில் வசு, அர்ஜூன் கதாப்பாத்திரங்கள் மங்களம் மாமி என்பவரது வீட்டுக்கு விருந்தினராக செல்கின்றனர்.
மங்களம் மாமியாக குஷ்புவும், அவரது உதவியாளராக நடிகர் வையாபுரியும் நடிக்கின்றனர். எண்ணற்ற தமிழ் படங்களில் காமெடி வேடத்தின் மூலம் ரசிகர்களைக் கவர்ந்த நடிகர் வையாபரி, பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு ரசிகர்களிடையே நன்மதிப்பை பெற்றார். இருவரும் இந்த தொடரில் சிறப்புத் தொடரில் நடித்திருப்பது, தொடருக்கு கூடுதல் சுவாரசியத்தை அளித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.