ஆபாச பட விவகாரம்: நடிகை ஷில்பா ஷெட்டியின் கருத்துக்கு மாதவன் பதில்

ஆபாச பட விவகாரம் குறித்து நடிகை ஷில்பா ஷெட்டி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த கருத்துக்கு நடிகர் மாதவன் பதிலளித்துள்ளார்.
ஆபாச பட விவகாரம்: நடிகை ஷில்பா ஷெட்டியின் கருத்துக்கு மாதவன் பதில்
Published on
Updated on
2 min read

ஆபாச பட விவகாரம் குறித்து நடிகை ஷில்பா ஷெட்டி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த கருத்துக்கு நடிகர் மாதவன் பதிலளித்துள்ளார்.

நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ஆபாசப் படங்களைத் தயாரித்து விற்பனை செய்த குற்றச்சாட்டிற்காக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். இந்த விவகாரம் மும்பை திரையுலகம் மட்டுமல்லாமல் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. 

இந்த விவகாரம் குறித்து முதன் முறையாக தனது இன்ஸ்டாகிராம் பக்கம் மூலமாக மனம் திறந்துள்ளார் நடிகை ஷில்பா ஷெட்டி. அதில், ''கடந்த சில நாட்கள், எங்கள் வாழ்க்கையின் மிகக் கடினமான காலகட்டம். எங்களைச் சுற்றி பல வதந்திகள் உலா வருகின்றன. 

என்னையும், என் குடும்பத்தினர் மீதும் பல்வேறு கேள்விகள் எழுப்பப்படுகின்றன. இதுவரை இந்த விவகாரம் குறித்து நான் பேசவில்லை. இந்த விவகாரம் நீதிமன்றத்தில் இருப்பதால் தற்போது இதுகுறித்து பேசுவது தவறு. எனவே என்னைப் பற்றி அவதூறு பரப்புவதை நிறுத்துங்கள். 

எப்பொழுதும் குற்றச்சாட்டை முன் வைக்காதே, எப்பொழுதும் விளக்கமளிக்காதே என்பது என் கொள்கை. நான் சொல்ல விரும்புவதெல்லாம், இந்த வழக்கு குறித்து விசாரணை நடைபெற்றுக்கொண்டிருக்கிறது, எனக்கு மும்பை காவல்துறையினர் மீதும், நம் நாட்டு நீதித்துறை மீதும் நம்பிக்கை இருக்கிறது என்பது தான்.

நான் ஒரு அம்மாவாக, என் குழந்தைகளின் நலன் கருதி, உண்மையை ஆராயமல் எந்தக் கருத்தையும் வெளியிடாதீர்கள் என நான் உங்களிடம் வேண்டிக் கேட்டுக்கொள்கிறேன். நான் கடந்த 29 வருடங்களாக சட்டத்தை மதிக்கும் இந்திய குடிமகனாக, கடின உழைப்பாளியாக மெருமைப்படுகிறேன். மக்கள் என் மீது நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். அந்த நம்பிக்கையை காக்கும் வண்ணம் நான் செயல்படுவேன், என்று குறிப்பிட்டுள்ளார். 

இவரது பதிவுக்கு ஆதரவாக பல்வேறு பிரபலங்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் நடிகர் மாதவன், ''எனக்கு தெரிந்த மன உறுதி கொண்ட நபர்களில் நீங்களும் ஒருவர். இந்தப் பிரச்சனைகளில் இருந்து மீண்டு வருவீர்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது. உங்களது குடும்பத்திற்காக நான் பிரார்த்திக்கிறேன்'' என்று தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com