திருவனந்தபுரத்தில் பலத்த பாதுகாப்புக்கிடையே பிரதமர் மோடி சாலை வலம்!இபிஎஸ்-க்கு மேலும் தோல்வியையே தர வேண்டும்: முதல்வர் ஸ்டாலின் தேர்தலில் போட்டியிடவில்லை: திருமாவளவன் திடீர் அறிவிப்பு! அரசியல் களத்தில் தம்பி விஜய்யை விமர்சிக்க மாட்டேன்- குஷ்புகேரளத்தில் ‘கவுண்ட்டவுன்’ ஆரம்பம்! பாஜக தலைமையில் ஆட்சி அமையும்! - பிரதமர் மோடிதிமுக அரசு வாங்கிய கடன் எங்கே போனது? மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் திரிணமூல் காங்கிரஸ் பெயரில் பணம் பறிக்கும் பாஜக: மமதா பானர்ஜி சிஎஸ்கேவின் 99% வெற்றிகளுக்குக் காரணம் எம்.எஸ். தோனி: அஸ்வின்
/

புகைப்படம் மூலம் விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்த நடிகை கீர்த்தி பாண்டியன்

புகைப்படம் வெளியிட்டு தன் மீதான விமர்சனங்களுக்கு நடிகை கீர்த்தி பாண்டியன் பதிலடி கொடுத்துள்ளார். 

News image
Updated On :17 ஆகஸ்ட் 2021, 9:34 am

நடிகரும், தயாரிப்பாளருமான அருண் பாண்டியனின் மகளான கீர்த்தி பாண்டியன் 'தும்பா' படத்தின் மூலமாக நாயகியாக அறிமுகமானார். தற்போது தனது அப்பா அருண் பாண்டியனுடன் இணைந்து 'அன்பிற்கினியாள்' படத்தில் நடித்து முடித்துள்ளார். மலையாளத்தில் வெளியான 'ஹெலன்' படத்தின் தமிழ் ரீமேக்கான இந்தப் படம் அமேசான் பிரைமில் வெளியாகியுள்ளது.

Story image

மேலும் கீர்த்தி பாண்டியன் தற்போது 'கண்ணகி' என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் முதல் பார்வை போஸ்டரில் அவர் கர்ப்பமாக இருப்பது போல் சித்தரிக்கப்பட்டிருக்கிறது. இந்த போஸ்டர் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. 

Story image

இந்த நிலையில் நடிகை கீர்த்தி பாண்டியன் தனது சுட்டுரைப் பக்கத்தில் தான் பிகினி உடையில் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். மேலும் புகைப்படங்களுடன் அறிக்கை ஒன்றையும் பகிர்ந்துள்ளார். அதில், ''கீர்த்தி கடலில் விழுந்தால், அவளுக்கு நீச்சல் தெரியாவிட்டாலும் தப்பித்துக்கொள்வாள். எப்படி தெரியுமா ? அவள் குச்சி. அதனால் அவள் கடலில் மிதந்து, தப்பித்து விடுவாள். நான் பள்ளிக்கு செல்லும்போதெல்லாம் இந்த நகைச்சுவையை என்னைப் பார்த்து சொல்வர். நான் வெளியே அதனை ரசிப்பது போல் காட்டிக் கொள்வேன். ஆனால் உண்மையில் என்னை அது மிகக் கடுமையாக தாக்கும். 

எனக்கு இன்னும் அந்த நாள் நியாபகம் இருக்கிறது. நான் பதின் பருவ வயதில் அடியெடுத்து வைக்கும் போது நிகழ்ந்தது அந்த சம்பவம். நான் நிஜத்தில் இருந்து தப்பித்துக்கொள்ள நினைத்தேன். தூங்கும்போது அழுதேன். அதன் பிறகு பல வருடங்களாக நான் குடும்பத்துடன், நண்பர்களுடன் வெளியில் செல்லும்போது, நான் நடிப்புத்துறைக்கு வந்தபோது, இதுபோன்ற கருத்துக்களை தொடர்ந்து எதிர்கொண்டேன். 

Story image

நான் எடை அதிகரிக்க முடிவு செய்து முயற்சித்தேன். அதற்காக உடற்பயிற்சிகளை மேற்கொள்ளத் துவங்கினேன். நம் மனதால் ஒருவிஷயத்தை முழுமையாக நம்பி செயலாற்றினால் எதையும் சாதிக்கலாம் என்று உணரத் துவங்கினேன். 

6 மாதங்களாக கடினமான உடற்பயிற்சி மற்றும் உணவுக் கட்டுப்பாடுகளை மேற்கொள்கிறேன். ஒவ்வொரு 100 கிராம் எடை அதிகரிப்பதும் எனக்கு மிகப் பெரிய வெற்றி மாதிரி. நான் எனக்காவே இதனை செய்தேன். வேறு யாரையும் திருப்திபடுத்தவற்காக அல்ல. நான் என்னை முன்பை விட மிகவும் நேசிக்கிறேன். இனியும் நான் எந்த எடையில், வண்ணத்தில் இருந்தாலும் என்னை நான் நேசிப்பேன். என்று குறிப்பிட்டுள்ளார். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.