தமிழ்நாட்டின் திட்டங்கள் புதுச்சேரிக்கும் தொடரும் : மு.க. ஸ்டாலின்பாஜகவுக்கு தமிழ்நாட்டில் கிடைத்த அடிமை பழனிசாமி மாதிரி, புதுச்சேரியில் ரங்கசாமி : மு.க. ஸ்டாலின்சென்னை சைதாப்பேட்டையில் நாளை (ஏப். 7) நடைபெறவிருந்த தவெக தலைவர் விஜய்யின் பிரசாரம் ரத்துகிடைக்கக்கூடாதவர்களுக்கு ஆட்சி கிடைத்துவிட்டது: திமுகவை விமர்சித்த எடப்பாடி பழனிசாமிசாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு : 9 குற்றவாளிகளுக்கும் மரண தண்டனைசென்னையில் தவெக தலைவர் விஜய்யின் பிரசாரம் திடீர் ரத்து!மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக நாடு திரும்புவார்களா? பிரியங்கா காந்திபுதுவையில் மத்திய அமைச்சர் அமித் ஷா பிரசாரம்!பாஜக வேட்பாளர் வென்றால் மதுரைக்கு மெட்ரோ ரயில் வரும்! ஃபட்னவீஸ்தமிழகத்தில் வேட்புமனு தாக்கல் நிறைவு!ஏப். 8, 9ல் சென்னையில் எடப்பாடி பழனிசாமி பிரசாரம்!
/

பிசாசு 2 திரைப்படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடிக்கும் நடிகர் அஜ்மல்

இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில் வெளியாகவுள்ள பிசாசு 2 திரைப்படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடிகர் அஜ்மல் நடித்துள்ளார்.

News image

நடிகர் அஜ்மல்

Updated On :19 ஆகஸ்ட் 2021, 1:12 pm

இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில் வெளியாகவுள்ள பிசாசு 2 திரைப்படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடிகர் அஜ்மல் நடித்துள்ளார்.

இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில் நடிகை ஆண்ட்ரியா நடிக்கும் திரைப்படம் பிசாசு 2.கார்த்திக் ராஜா இசையமைக்கிறார். பிசாசு முதல் பாகம் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பைப் பெற்ற நிலையில் பிசாசு 2 திரைப்படத்தை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளனர்.

இந்நிலையில் இயக்குநர் மிஷ்கினின் அஞ்சாதே திரைப்படத்தில் அறிமுகமானவர் நடிகர் அஜ்மல். அதனைத் தொடர்ந்து பல்வேறு திரைப்படங்களில் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களின் ஆதரவைப் பெற்ற அஜ்மல் சமீபத்தில் வெளியான நெற்றிக்கண் திரைப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இவற்றுக்கு மத்தியில் பிசாசு 2 திரைப்படத்தில் நடிகர் அஜ்மல் சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. தன்னை அறிமுகப்படுத்திய இயக்குநரின் திரைப்படத்திலேயே சிறப்புத் தோற்றத்தில் நடித்திருக்கும் அஜ்மல் ரசிகர்களின் வரவேற்பை எதிர்நோக்கியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.