சொன்ன வாக்கைக் காப்பாற்றுவாரா நடிகர் அஜித் ? - பிரபலத்தின் பதிவால் ரசிகர்கள் ஆவல்
நடிகர் அஜித் குறித்து இசையமைப்பாளர் ஜிப்ரானின் பதிவை பகிரும் ரசிகர்கள், இருவரும் இணைவது குறித்து ஆவல் தெரிவித்து வருகின்றனர்.
நடிகர் அஜித் தற்போது 'வலிமை' படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் இருந்து வெளியான வேற மாரி பாடல் மற்றும் முதல் பார்வை போஸ்டர் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. குறிப்பாக வேற மாரி பாடலை யூடியூபில் 1 கோடிக்கும் அதிகமான பார்வையாளர்கள் பார்த்துள்ளனர்.
இதையும் படிக்க | அவன் - இவன் பட வழக்கு: இயக்குநர் பாலாவை விடுவித்த நீதிமன்றம்
இந்தப் படத்தில் வில்லனாக தெலுங்கு நடிகர் கார்த்திகேயா கும்மகொண்டா நடிக்கிறார். யுவன் சங்கர் ராஜா இசையில் 'வலிமை' மற்றும் 'மாநாடு' படங்களின் இரண்டாவது பாடல் தயாராகிவிட்டன எனவும் விரைவில் வெளியாகும் எனவும் 'மாநாடு' பட இயக்குநர் வெங்கட் பிரபு தெரிவித்தார்.
இந்த நிலையில் இரண்டு வருடங்களுக்கு முன் இசையமைப்பாளர் ஜிப்ரான் சந்தித்து பேசியது குறித்து தனது சுட்டுரைப் பக்கத்தில் குறிப்பிட்டிருந்தார். அதனை அஜித் ரசிகர்கள் இப்போது பகிர்ந்து டிரெண்ட் செய்து வருகின்றனர்.
இதையும் படிக்க | பிரபல நடிகைக்கு ஆண் குழந்தை
அந்தப் பதிவில், 'நடிகர் அஜித்தை நான் சந்தித்தது ஒரு ரசிகரின் சந்திப்பு போன்றது. அவரைப் பற்றி எல்லோரும் சொல்வதைக் காட்டிலும் அதிகம் சிறப்பானவராக இருக்கிறார். அவர் 'நம்ம சேர்ந்து ஒர்க் பண்ணுவோம்' என்று என்னிடம் சொன்னது இன்னும் என் காதில் ஒலித்துக்கொண்டிருக்கிறது'' என்றார். இந்த சுட்டுரைப் பதிவை பகிரும் ரசிகர்கள், இருவரும் இணைவது குறித்து தங்கள் ஆவலை தெரிவித்து வருகின்றனர்.
A true fanboy moment
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.