திமுக அரசின் திட்டத்துக்கு அன்றே குரல் கொடுத்த நடிகர் அஜித் ? - டிரெண்ட் செய்யும் ரசிகர்கள்

தமிழக கோயில்களில் தமிழில் அர்ச்சனை திட்டம் குறித்து நடிகர் அஜித் பில்லா பாடலில் அன்றே குரல் கொடுத்திருப்பதை ரசிகர்கள் டிரெண்ட் செய்து வருகின்றனர். 
திமுக அரசின் திட்டத்துக்கு அன்றே குரல் கொடுத்த நடிகர் அஜித் ? - டிரெண்ட் செய்யும் ரசிகர்கள்
Published on
Updated on
1 min read

தமிழக கோயில்களில் தமிழில் அர்ச்சனை திட்டம் குறித்து நடிகர் அஜித் பில்லா பாடலில் அன்றே குரல் கொடுத்திருப்பதை ரசிகர்கள் டிரெண்ட் செய்து வருகின்றனர். 

தமிழக அரசு சார்பில் தமிழகத்தில் உள்ள ஹிந்து கோயில்களில் தகுந்த பயிற்சிகள் பெற்றுள்ள இந்துக்களில், அனைத்து சாதியினரையும் சாதி வேறுபாடின்றி அர்ச்சகராக்க வேண்டும் என்ற கோரிக்கை பல ஆண்டுகளாக நிலவி வருகிறது. இதற்கு ஆதரவாகவும், எதிராகவும் மக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். 

இதற்காக முன்னாள் முதல்வர் கருணாநிதி, அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற சட்டத்தைக் கொண்டு வந்து நிறைவேற்றியிருந்தார். ஆனால்  பல்வேறு சிக்கல்கள் காரணமாக நிறைவேற்றப்படாமல் இருந்தது.

இந்த நிலையில் சமீபத்தில் ஆட்சிக்கு வந்த திமுக அரசு அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற சட்டத்தை நிறைவேற்றியிருக்கிறது. இந்தத் திட்டத்தின் கீழ் 58 பேர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பணி நியமன ஆணையை வழங்கினார்.

மேலும், தமிழகத்தில் இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள 47  ஆலயங்களில் அன்னைத் தமிழில் அர்ச்சனை திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. கோயில்களில் தமிழில் அர்ச்சனை செய்யும்போது, அதன் அர்த்தம் மக்களுக்கு எளிதில் புரியும் என்று கூறப்படுகிறது. அன்னைத் தமிழில் அர்ச்சனை திட்டத்தை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் தொடங்கப்பட்டுள்ளது.  

பொதுவாக சமீபகால நிகழ்வுகள் குறித்து ஏற்கனவே திரைப்படங்களில் முன் கூட்டியே சொல்லப்பட்டிருந்தால், ரசிகர்கள் அன்றே கணித்தார் என்ற ஹேஸ்டேக்கை பயன்படுத்தி டிரெண்ட் செய்வர். குறிப்பாக சுனாமி குறித்து 'அன்பே சிவம்' படத்தில் கமல் பேசியிருப்பார். 

இதனைப் போல, தமிழக அரசு சார்பில் அன்னைத் தமிழில் அர்ச்சனை திட்டம் தொடங்கப்பட்டுள்ள நிலையில், 'பில்லா' படத்தில் சேவற்கொடி பாடலில் 'தமிழன் பேசும் தமிழ் குல விளக்கு, வேற்றுமொழியில் அர்ச்சனை எதற்கு' என்ற பாடலை பாடியிருப்பார். பா.விஜய் எழுதிய இந்தப் பாடல் மிகப் பிரபலம். இதனைக் குறிப்பிட்டு தமிழக அரசின் திட்டத்துக்கு அன்றே குரல் கொடுத்த நடிகர் அஜித் என்று அவரது ரசிகர்கள் டிரெண்ட் செய்து வருகின்றனர். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com