மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

'தலைவி' படத்தின் வெளியீடு தேதி அறிவிப்பு

பிரபல ஹிந்தி நடிகையான கங்கனா ரணாவத்தின் நடிப்பில் இயக்குநர் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி மொழிகளில் உருவாகும்  'தலைவி' திரைப்படத்தின் வெளியீடு தேதியை அப்படத்தின் நாயகி கங்கனா வெளியி

News image
'தலைவி' படத்தின் வெளியீடு தேதி அறிவிப்பு
Updated On :23 ஆகஸ்ட் 2021, 11:28 am

DIN

பிரபல ஹிந்தி நடிகையான கங்கனா ரணாவதின் நடிப்பில் இயக்குநர் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளில் உருவாகும்  'தலைவி' திரைப்படத்தின் வெளியீடு தேதியை அப்படத்தின் நாயகி கங்கனா வெளியிட்டிருக்கிறார்.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதாவின் வாழ்க்கையை தழுவி 'தலைவி' திரைப்படம் உருவாகியிருக்கிறது. சாதரண நிலையில் இருந்து அரசியலில் நெருங்க முடியாத உயரத்திற்கு சென்ற ஒரு பெண்ணின் ஆளுமையைச் சொல்லும் முறையில் உருவாக்கப்பட்டிருக்கிற இப்படத்தின் 'டிரைலர்' சில மாதங்களுக்கு முன் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றதுடன் படத்திற்கான எதிர்பார்ப்பும் அதிகரித்தது.

பெரும் பொருட்செலவில் பெரிய நடிகர்களைக் கொண்டு எடுக்கப்பட்ட இத்திரைப்படத்தை கரோனாவால் திரையிட முடியாமல் இருந்தனர். தற்போது திரையரங்குகள் திறக்கப்பட்ட நிலையில் இப்படத்தை செப்டம்பர்-10 ஆம் தேதி வெளியிட இருப்பதாக படத்தின் நாயகி கங்கனா ரணாவத் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார்.

ஜெயலலிதாவாக நடித்த கங்கனாவுடன் அரவிந்த் சாமி (எம்ஜிஆர்) , நாசர் (கருணாநிதி) , சமுத்திரக்கனி (ஆர்.எம் வீரப்பன்) , மதுபாலா (ஜானகி ராமச்சந்திரன்) , பூர்ணா (சசிகலா) , தம்பி ராமையா (நடராஜன்) போன்ற நடிகர்கள் வலுவான கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.

விப்ரி மோஷன் பிக்சர்ஸ் மற்றும் ஜீ ஸ்டுடியோஸ் தயாரித்த இப்படத்திற்கு ஜி.வி பிரகாஷ் குமார் இசையமைத்திருக்கிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.