''சிவகார்த்திகேயனுடன் உங்க கெமிஸ்ட்ரி சூப்பர்'' - சூரியைப் புகழ்ந்த ரஜினிகாந்த் : வேற என்ன சொன்னார் தெரியுமா ?
சிவகார்த்திகேயன் மற்றும் சூரி இணைந்து நடிக்கும் காட்சிகள் நன்றாக இருப்பதாக நடிகர் ரஜினிகாந்த் கருத்து தெரிவித்துள்ளார்.


சிவகார்த்திகேயன் மற்றும் சூரி இணைந்து நடிக்கும் காட்சிகள் நன்றாக இருப்பதாக நடிகர் ரஜினிகாந்த் கருத்து தெரிவித்துள்ளார்.
நடிகர் சூரியின் பிறந்தநாள் நேற்று (வெள்ளிக்கிழமை) கொண்டாடப்பட்டது. பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் அவருக்கு வாழத்து தெரிவித்தனர். நடிகர் சூர்யாவின் 'எதற்கும் துணிந்தவன்' படப்பிடிப்பில் சூர்யா, சத்யராஜ் உள்ளிட்ட நடிகர்கள் முன்னிலையில் நடிகர் சூரியின் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது.


இந்த நிலையில் 'அண்ணாத்த' படத்தில் ரஜினிகாந்த்துடன் நடித்த அனுபவம் குறித்து பகிர்ந்து கொண்டார். அதில், ''நான் படப்பிடிப்புக்கு சென்றபோது அவர் ஏற்கனவே தயாராக இருந்தார். ஒரு ரசிகனாக அவரை எதிர்பார்த்துக் காத்திருந்தேன். அவரைச் சந்தித்தபோது இது கனவா ? என்று கிள்ளிக்கொண்டேன்.

அவர், ''ஓ! சூரி எப்படி இருக்கிறீர்கள்? என்று வாஞ்சையோடு கேட்டார். பின்னர் சிவகார்த்திகேயனுடன் உங்களது கெமிஸ்ட்ரி சூப்பர் என்று சொல்லிவிட்டு
அந்தப் படங்களை நினைவுபடுத்தி சொன்னார். அதன் பிறகு தயங்கி நின்றாலும் இடைவெளிகளில் அழைத்து அருகில் அமர வைத்து உரையாடி கூச்சம் போக்கினார்.
படப்பிடிப்பு முடிந்து ஊருக்கு திரும்பும்போது விமானத்தில் அவர் இருக்கைக்கு அடுத்த இருக்கை. அவரே அப்படி போட சொல்லி இருக்கிறார். மிகப்பெரிய இயக்குநர், தலைசிறந்த சூப்பர் ஸ்டார் என 'அண்ணாத்த' படம் என் வாழ்வில் மறக்க முடியாத படமாக அமைந்துவிட்டது'' என்று பேசியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...