அல்லு அர்ஜுன் - ஃபகத் பாசில் இணைந்து நடித்துள்ள புஷ்பா திரைப்படத்தின் டிரெய்லர் நேற்று வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. வெளியான சில மணி நேரங்களிலேயே 2 கோடி பார்வையாளர்களைப் பெற்றது.
இந்தப் படம் செம்மரக் கடத்தலை மையப்படுத்தி உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது. இந்தப் படத்தில் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக ராஷ்மிகா நடிக்க வில்லனாக ஃபகத் ஃபாசில் நடித்துள்ளார். தேவி ஸ்ரீ பிரசாத் இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளார். சுகுமார் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள இந்தப் படத்தின் முதல் பாகம் வருகிற 17 ஆம் தேதி திரைக்குவரவிருக்கிறது.
இந்த நிலையில் இயக்குநர் ராம் கோபால்வர்மா தனது சுட்டுரைப் பக்கத்தில், அல்லு அர்ஜுன் என்ற ஒரே சூப்பர் ஸ்டார் தான் இதுபோன்ற யதார்த்தமான வேடங்களை செய்பவர். பவன் கல்யாண், மகேஷ் பாபு, சிரஞ்சீவி, ரஜினிகாந்த் போன்றவர்களுக்கு இதுபோன்ற வேடங்களை ஏற்பதற்கு தைரியம் இருக்கிறதா என கேள்வி எழுப்பியுள்ளார்.