தமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் கேரளத்துக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு அசாம்: ஏப்ரல் 9 பேரவைத் தேர்தல் 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 824 சட்டப்பேரவைத் தொகுதிகளில் தேர்தல் நடைபெறவுள்ளது 5 மாநில தேர்தல்களில் மொத்தம் 17.4 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

'சோகம் என்னன்னா...': 'பீஸ்ட்' படம் எப்படி இருக்கும்? பூஜா ஹெக்டே விடியோ மூலம் தகவல்

பீஸ்ட் படத்தில் பணிபுரிந்த அனுபவம் குறித்து நடிகை பூஜா ஹெக்டே விடியோ மூலம் தகவல் பகிர்ந்துள்ளார். 

News image
Updated On :10 டிசம்பர் 2021, 8:05 am

DIN

நடிகர் விஜய்யின் 'பீஸ்ட்' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. 

முதன்முறையாக இந்தப் படத்தில் நடிகர் விஜய்யுடன் பூஜா ஹெக்டே நடித்துள்ளார். அல வைக்குந்தபுரமுலோ படத்தில் அல்லு அர்ஜுனுடன் இவர் நடனமாடிய புட்ட பொம்மா பாடல் மூலம் தேசிய அளவில் பிரபலமாகியிருக்கிறார். 

இந்த நிலையில் சன் டிவி தனது யூடியூப் பக்கத்தில் பூஜா ஹெக்டே பேசிய விடியோவை பகிர்ந்துள்ளது. அதில், பீஸ்ட் படத்தில் நடித்த நல்ல அனுபவம். இந்தப் படம் உருவாகும்போது நிறைய சிரித்தோம். நீங்களும் இந்தப் படம் பார்க்கும்போது நன்றாக சிரிப்பீர்கள். சிறந்த பொழுதுபோக்கு படமாக பீஸ்ட் இருக்கும். இந்தப் படம் இயக்குநர் நெல்சன் மற்றும் விஜய் பாணியிலான படமாக இருக்கும். 

இந்தப் படப்பிடிப்பில் கலந்துகொண்டது சுற்றுலா சென்றது போல இருந்தது. சோகம் என்னவென்றால் இன்று என்னுடைய கடைசி நாள். திரையரங்கில் சந்திப்போம் என்று தெரிவித்துள்ளார். 

YouTube video thumbnail

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.