நடிகை ஐஸ்வர்யா ராயிடம் அமலாக்கத்துறை விசாரணை

நடிகை ஐஸ்வர்யா ராயிடம் அமலாக்கத்துறை விசாரணை மேற்கொண்டுவருவதாக தகவல் வெளியாகியுள்ளது. 
நடிகை ஐஸ்வர்யா ராயிடம் அமலாக்கத்துறை விசாரணை
Published on
Updated on
1 min read

ஹிந்தி நடிகையான ஐஸ்வர்யா ராய் பச்சன் வெளிநாடுகளில் சட்ட விரோதமாக தன்னுடைய பணத்தை முதலீடு செய்துள்ளதாக குற்றச்சாட்டுக்கு உள்ளானார். 

கடந்த 2016 ஆம் ஆண்டு பனாமா  சட்ட நிறுவனத்தின் ஆவணங்கள் கசிந்து பத்திரிக்கைகளில் வெளியானது. அதில் வரியை தவிர்க்க வெளிநாடுகளில் முதலீடு செய்துள்ளவர்களின் விவரங்கள் இடம்பெற்றிருந்தது. அதில் ஐஸ்வர்யா ராய் உட்பட 300க்கும் மேற்பட்ட இந்தியர்கள் வெளிநாடுகளில் சட்ட விரோதமாக பணம் முதலீடு செய்துள்ளதாக கூறப்படுகிறது.  

இதனையடுத்து விசாரணையைத் துவங்கிய இந்திய அமலாக்கத்துறை, இந்தக் குற்றச்சாட்டு தொடர்பாக கடந்த 2017 ஆம் ஆண்டு அமிதாப் பச்சன் குடும்பத்தினரிடம் வெளிநாட்டு பணப்பரிவர்த்தனை செய்த விவரங்களைக் கேட்டுள்ளனர். 

இதனையடுத்து ஐஸ்வர்யா ராயிற்கு சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. நடிகை ஐஸ்வர்யா ராய் தனது வெளிநாடு பணப்பரிவர்த்தனைகளை அமலாக்கத்துறையிடம் சமர்பித்துள்ளார்.

இந்த நிலையில் தில்லியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com