''ரஜினி சார், தயவு செய்து என் படத்தை பாருங்க'' - ரஜினிகாந்த்திடம் பிரபல நடிகர் கோரிக்கை

''ரஜினி சார், தயவு செய்து என் படத்தை பாருங்க'' - ரஜினிகாந்த்திடம் பிரபல நடிகர் கோரிக்கை

தன் படத்தைப் பார்க்குமாறு நடிகர் ரஜினிகாந்த்திடம் பிரபல நடிகர் கோரிக்கை விடுத்துள்ளார். 
Published on

தருண் குமார் அபர்ணிதி, அருள்தாஸ் உள்ளிட்டோர் நடிப்பில் உருவான படம் தேன். கணேஷ் விநாயகன் இந்தப் படத்தை இயக்கியிருந்தார். 

கடந்த மார்ச் 19 ஆம் தேதி நேரடியாக சோனி லிவ் ஓடிடி தளத்தில் வெளியான இந்தப் படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்துக்கு எம்.சுகுமார் ஒளிப்பதிவு செய்ய, சனத் பரத்வாஜ் இசையமைத்திருந்தார்.

இந்த நிலையில் இந்தப் படத்தில் நாயகனாக நடித்த தருண் குமார், தனது ட்விட்டர் பக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த்துக்கு கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.

அதில், ரஜினிகாந்த் சார் தயவு செய்து என் படத்தை பாருங்கள். நாங்கள் தேன் படத்தை உங்களிடம் காட்ட முயற்சித்தோம். தேன் படம் தற்போது சோனி லிவ் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. என்று குறிப்பிட்டுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com