ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கைஅல்-காய்தா, ஐஎஸ் அமைப்புகளுக்கு எதிராக கூட்டு நடவடிக்கை: ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்தல்பல்வேறு துறைகளைச் சோ்ந்த ஆளுமைகளுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று கலந்துரையாடல்சீனாவின் பாதுகாப்பு பட்ஜெட் 7% உயா்வுமத்திய கிழக்கு போா் : இந்தியாவில் யூரியா உற்பத்தி சரிவு: உர விலை உயரும் அபாயம்?
/

கோலி - அனுஷ்கா சர்மா குழந்தையின் பெயர்!

அனுஷ்கா சர்மாவுக்குக் கடந்த மாதம் பெண் குழந்தை பிறந்தது.  தனக்குப் பெண் குழந்தை பிறந்ததை...

News image
Updated On :1 பிப்ரவரி 2021, 7:29 am

DIN


விராட் கோலி - அனுஷ்கா சர்மாவின் குழந்தைக்கு வாமிகா எனப் பெயரிடப்பட்டுள்ளது.

விராட் கோலியும், அனுஷ்கா சர்மாவும் கடந்த 2017-ல் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இதையடுத்து கர்ப்பமான அனுஷ்கா சர்மாவுக்கு ஜனவரியில் குழந்தை பிறக்கும் என மருத்துவர்கள் தெரிவித்ததைத் தொடர்ந்து ஆஸ்திரேலியத் தொடரில் விளையாடி வந்த விராட் கோலி, அடிலெய்டில் நடைபெற்ற முதல் டெஸ்ட் ஆட்டத்தை முடித்த பிறகு விடுப்பில் நாடு திரும்பினார். 

அனுஷ்கா சர்மாவுக்குக் கடந்த மாதம் பெண் குழந்தை பிறந்தது.  தனக்குப் பெண் குழந்தை பிறந்ததை ட்விட்டரில் அறிவித்த கோலி, எங்களுக்கு பெண் குழந்தை பிறந்திருக்கிறது. அனைவருடைய அன்புக்கும் பிரார்த்தனைக்கும், வாழ்த்துகளுக்கும் நன்றி. தாயும், சேயும் நலமாக உள்ளனர் எனக் குறிப்பிட்டார். 

இந்நிலையில் குழந்தையுடன் பெற்றோர் எடுத்துக்கொண்ட புகைப்படம் வெளியாகியுள்ளது. புகைப்படத்தைப் பகிர்ந்த நடிகை அனுஷ்கா சர்மா, குழந்தைக்கு வாமிகா எனப் பெயரிடப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். 

Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.