ஒரு ட்வீட் உங்கள் ஒற்றுமையைப் பிளவுபடுத்துகிறதா?: பிரபலங்களுக்கு நடிகை தாப்சி கேள்வி

ஒரு ட்வீட் உங்கள் ஒற்றுமையைப் பிளவுபடுத்துகிறது என்றால் நீங்கள் தான் உங்களை வலுப்படுத்திக்கொள்ள வேண்டும் என்று...
ஒரு ட்வீட் உங்கள் ஒற்றுமையைப் பிளவுபடுத்துகிறதா?: பிரபலங்களுக்கு நடிகை தாப்சி கேள்வி

ஒரு ட்வீட் உங்கள் ஒற்றுமையைப் பிளவுபடுத்துகிறது என்றால் நீங்கள் தான் உங்களை வலுப்படுத்திக்கொள்ள வேண்டும் என்று நடிகை தாப்சி ட்வீட் வெளியிட்டுள்ளார். 

புதிய வேளாண் சட்டங்களை முழுமையாகத் திரும்பப் பெற வலியுறுத்தி தில்லியின் சிங்கு, டிக்ரி உள்ளிட்ட பல்வேறு எல்லைப் பகுதிகளை முற்றுகையிட்டு தொடா்ந்து 2 மாதங்களுக்கு மேலாக  பஞ்சாப், ஹரியாணா, உத்தர பிரதேசத்தைச் சோ்ந்த விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனா்.  

ஸ்வீடனைச் சோ்ந்த சுற்றுச்சூழல் போராளி கிரேட்டா தன்பா்க், பாடகியும் நடிகையுமான ரியானா உள்ளிட்ட பிரபலங்கள் விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவாக சமூக வலைதளங்களில் பதிவுகள் வெளியிட்டுள்ளார்கள். விவசாயிகள் போராட்டம் பற்றிய ஒரு செய்தியைப் பகிர்ந்து, இதைப் பற்றி ஏன் யாரும் பேசுவதில்லை என்று கேள்வி எழுப்பினார் ரியானா. இதற்கு மத்திய அரசு கண்டனம் தெரிவித்துள்ளது. வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: புதிய வேளாண் சட்டங்கள் மூன்றும், வேளாண் துறையில் சீா்திருத்தங்களை மேற்கொள்வதற்காக இந்திய நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டவையாகும். அந்தச் சட்டங்களுக்கு எதிரான போராட்டத்தை சில சுயநலவாதிகள் சா்வதேசப் பிரச்னையாக மாற்ற முயல்கின்றனா். இந்தியாவின் ஜனநாயக உரிமை மற்றும் சம்பந்தப்பட்ட விவசாயிகளுடன் பேசி பிரச்னைக்குத் தீா்வு காண்பதற்கான அரசின் முயற்சி ஆகிய கண்ணோட்டத்தில் விவசாயிகள் போராட்டத்தை அணுக வேண்டும். இந்த விவகாரத்தில் அவசரப்பட்டு கருத்து தெரிவிப்பதற்கு முன்னரும், அனைவரும் இந்தப் பிரச்னையைப் பற்றி முழுமையாக புரிந்துகொள்ள வேண்டும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரியானாவின் ட்வீட்டை முன்வைத்து நடிகை கங்கனா ரணாவத் ட்விட்டரில் கூறியதாவது: யாரும் இதைப் பற்றி பேசுவதில்லை. ஏனெனில் அவர்கள் விவசாயிகள் அல்ல. இந்தியாவைப் பிரிக்க நினைக்கும் தீவிரவாதிகள். இதன்மூலம் பாதிக்கப்பட்டுள்ள இந்தியாவை சீனா ஆக்கிரமித்து, அமெரிக்காவைப் போல ஒரு சீன காலனித்துவ நாடாக மாற்ற முயற்சி செய்கிறது. அமைதியாக உட்கார் முட்டாளே, உங்களைப் போல நாங்கள் நாட்டை விற்பவர்கள் அல்ல என்று கூறியுள்ளார். மேலும் தொடர்ந்து ரியானாவுக்கு எதிரான ட்வீட்களை கங்கனா வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில் விவசாயிகள் போராட்டம் தொடர்பாக இந்தியாவுக்கு ஆதரவாகவும் பாடகி ரியானாவின் கருத்துக்கு மறைமுக எதிர்ப்பையும் கிரிக்கெட் மற்றும் பாலிவுட் பிரபலங்கள் ட்விட்டர் தளத்தில் பதிவு செய்துள்ளார்கள். இதையடுத்து நடிகை தாப்சி ட்விட்டரில் கூறியதாவது: 

ஒரு ட்வீட் உங்கள் ஒற்றுமையைப் பிளவுபடுத்துகிறது, ஒரு நகைச்சுவை நம்பிக்கையில் பாதிப்பை ஏற்படுத்துகிறது, ஒரு நிகழ்ச்சி உங்கள் மத நம்பிக்கையில் பாதிப்பை ஏற்படுத்துகிறது என்றால் நீங்கள் தான் உங்களுடைய மதிப்பை வலுப்படுத்திக்கொள்ள வேண்டும். மற்றவர்களுக்குப் பிரசார ஆசிரியர்களாக மாறக் கூடாது என்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com