

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு நடிகர் ஹரிஷ் கல்யாண் பாராட்டு தெரிவித்துள்ளார்.
குக் வித் கோமாளி - பருவம் 2 விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது. நடிகை ஷகிலா, மதுரை முத்து, பாபா பாஸ்கர், கடைக்குட்டி சிங்கம் தீபா போன்றோர் பங்கேற்று வரும் இந்நிகழ்ச்சியில் கோமாளிகளாக சிவாங்கி, புகழ், பாலா, மணிமேகலை போன்றோர் பங்கேற்று வருகிறார்கள்.
இந்த வார நிகழ்ச்சியில் நடிகர் சிவகார்த்திகேயன் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று இந்நிகழ்ச்சியையும் போட்டியாளர்களையும் பாராட்டிப் பேசியுள்ளார். இந்நிகழ்ச்சி குறித்து நடிகர் ஹரிஷ் கல்யாண் ட்விட்டரில் கூறியதாவது:
குக் வித் கோமாளி நிகழ்ச்சி சமீபகாலமாக என்னுடைய அழுத்தங்களைக் குறைத்து மகிழ்ச்சியை ஏற்படுத்தும் நிகழ்ச்சியாக உள்ளது. அனைத்து போட்டியாளர்களும் அருமையாகத் திறமையை வெளிப்படுத்துகிறார்கள். அனைவரையும் நேரில் சந்தித்து பொழுதுபோக்கை வழங்குவதற்காக நன்றி கூற வேண்டும் என விருப்பப்படுகிறேன். அனைவரும் சிறப்பாகச் செய்யுங்கள். நிகழ்ச்சியின் குழுவினருக்கு வாழ்த்துகள் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.