அதிகாரபூர்வ அறிவிப்பு: ஜனவரி 15-ல் சன் டிவியில் நேரடியாக வெளியாகும் புலிக்குத்தி பாண்டி படம்!

விக்ரம் பிரபு நடித்த புலிக்குத்தி பாண்டி படம், ஜனவரி 15 அன்று சன் டிவியில் நேரடியாக வெளியாகவுள்ளது. 
அதிகாரபூர்வ அறிவிப்பு: ஜனவரி 15-ல் சன் டிவியில் நேரடியாக வெளியாகும் புலிக்குத்தி பாண்டி படம்!
Updated on
1 min read

விக்ரம் பிரபு நடித்த புலிக்குத்தி பாண்டி படம், ஜனவரி 15 அன்று சன் டிவியில் நேரடியாக வெளியாகவுள்ளது. 

கரோனா அச்சுறுத்தல் காரணமாக திரையரங்குகள் பல மாதங்களாக மூடப்பட்டிருந்தன. இதனால் திரையரங்குகளில் படங்களைப் பார்க்கும் வாய்ப்பு ரசிகர்களுக்கு இல்லாமல் இருந்தது. கரோனாவால் திரைப்படத் துறையில் ஏற்பட்டிருக்கும் அசாதாரண சூழலில், சினிமாவின் மாற்றுத் தளமாக  ‘ஓடிடி’ அமைந்திருக்கிறது. சினிமா ரசிகர்கள் வீட்டுக்குள் இருந்து தொலைக்காட்சி, இணையம் வழியாக படங்களைப் பார்த்து வருகிறார்கள். இதனால் நெட்பிளிக்ஸ், அமேசான் பிரைம் போன்ற ஓடிடி தளங்கள் அதிகம் பலனடைந்துள்ளன. ஓடிடி தளங்களில் படங்கள் நேரடியாக வெளியாவதால் தொலைக்காட்சியிலும் படங்கள் நேரடியாக வெளியாகி வருகின்றன.

கன்னடப் படமான மாயாபஸார் 2016 படம் தமிழில் ரீமேக் ஆனது. வீராப்பு, தில்லு முல்லு படங்களை இயக்கிய பத்ரி, மாயாபஸார் 2016 ரீமேக்கைத் தமிழில் இயக்கினார். நாங்க ரொம்ப பிஸி எனப் பெயரிடப்பட்ட இந்தப் படத்தில் பிரசன்னா, ஷாம், அஸ்வின், யோகி பாபு, ஷ்ருதி மராத்தே போன்றோர் நடித்தார்கள். நாங்க ரொம்ப பிஸி படம் நவம்பர் 14 அன்று (தீபாவளி) காலை 11 மணிக்கு சன் தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்பானது.

இந்நிலையில் மற்றொரு தமிழ்ப் படம் சன் டிவியில் நேரடியாக வெளியாகவுள்ளது. 

விக்ரம் பிரபு, லட்சுமி மேனன், சமுத்திரக்கனி நடிப்பில் புலிக்குத்தி பாண்டி என்கிற படத்தை இயக்கியுள்ளார் முத்தையா. இந்தப் படம் ஜனவரி 15 அன்று மாலை 6.30 மணிக்கு சன் டிவியில் நேரடியாக ஒளிபரப்பாகவுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com