சின்னத்திரையில் அறிமுகமாகும் ரன்வீர் சிங்
பிரபல பாலிவுட் நடிகரான ரன்வீர் சிங், தொலைக்காட்சி நிகழ்ச்சியில் தொகுப்பாளராக அறிமுகமாகிறார்.


பிரபல பாலிவுட் நடிகரான ரன்வீர் சிங், தொலைக்காட்சி நிகழ்ச்சியில் தொகுப்பாளராக அறிமுகமாகிறார்.
2010-ல் பாலிவுட்டில் நடிகரான அறிமுகமான ரன்வீர் சிங், பல வெற்றிப் படங்களில் நடித்துள்ளார். இந்தியாவில் அதிகமாகச் சம்பளம் வாங்கும் நடிகர்களில் ஒருவராக உள்ளார். 2018-ல் பிரபல நடிகை தீபிகா படுகோனைத் திருமணம் செய்துகொண்டார். ஷங்கர் இயக்கவுள்ள அந்நியன் ஹிந்தி ரீமேக்கில் கதாநாயகனாக நடிக்கவுள்ளார்.
இந்நிலையில் கலர்ஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் தி பிக் பிக்சர் என்கிற புகைப்படங்களைக் கொண்ட கேள்வி - பதில் நிகழ்ச்சியில் தொகுப்பாளராகப் பணியாற்றவுள்ளார் ரன்வீர் சிங். இதன்மூலம் சின்னத்திரையில் அவர் அறிமுகமாகிறார். தி பிக் பிக்சர் நிகழ்ச்சி ஆகஸ்ட் முதல் கலர்ஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...