நடிகை சரண்யா மகள் திருமணம்: படங்கள்
நட்சத்திரத் தம்பதி நடிகர் பொன்வண்ணன் - நடிகை சரண்யா மகளின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்!
நடிகர் பொன்வண்ணன் - நடிகை சரண்யாவுக்கு ப்ரியதர்ஷினி, சாந்தினி என இரு மகள்கள் உண்டு. இந்நிலையில் மூத்த மகள் ப்ரியதர்ஷினி, விக்னேஷை நேற்று திருமணம் செய்துகொண்டார். சென்னையில் நடைபெற்ற திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் ஸ்டாலின், திமுக இளைஞரணிச் செயலாளரும், எம்எல்ஏ-வுமான உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் கலந்துகொண்டார்கள். மரக்கன்று பசுமைக்கூடையைப் பரிசாக வழங்கி மணமக்களை வாழ்த்தினார் முதல்வர். தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் திருமணப் புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார் நடிகை தேவதர்ஷினி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.