ஒளிப்பதிவு திருத்த மசோதா விவகாரம்: தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்த தயாரிப்பாளர்கள் சங்கம்

ஒளிப்பதிவு திருத்த மசோதாவுக்குத் தமிழக முதல்வர் ஸ்டாலின் எதிர்ப்பு தெரிவித்ததற்கு தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் நன்றி...
தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் முரளி ராமசாமி, தமிழக முதல்வர் ஸ்டாலினை தலைமைச் செயலகத்தில் நேற்று சந்தித்து ஒளிப்பதிவு திருத்த மசோதா தொடர்பான கோரிக்கை மனுவை அளித்தார்.
தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் முரளி ராமசாமி, தமிழக முதல்வர் ஸ்டாலினை தலைமைச் செயலகத்தில் நேற்று சந்தித்து ஒளிப்பதிவு திருத்த மசோதா தொடர்பான கோரிக்கை மனுவை அளித்தார்.

ஒளிப்பதிவு திருத்த மசோதாவுக்குத் தமிழக முதல்வர் ஸ்டாலின் எதிர்ப்பு தெரிவித்ததற்கு தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளது.

ஒளிப்பதிவு திருத்த மசோதா 2019, பிப்ரவரி 12-ஆம் தேதி மாநிலங்களவை அறிமுகப்படுத்தப்பட்டு பின்னா் அது நிலைக் குழுவிற்கு அனுப்பப்பட்டது. நிலைக்குழு கடந்தாண்டு மாா்ச் மாதம் அறிக்கையை சமா்ப்பித்தது. தற்போது மீண்டும் 2021-இல் இந்த மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படுகிறது. இந்தத் திருத்தச் சட்டப்படி ஒரு முறை தணிக்கைக்கு உள்ளான திரைப்படங்கள் மீண்டும் தணிக்கை செய்ய கோர முடியும். மேலும், திரைப்பட திருட்டுகளுக்கு கடுமையான சிறை தண்டனை, அபராதம் ஆகியவை விதிக்கப்பட உள்ளன. 

இந்த மசோதாவுக்குத் திரைப்படத் துறையினா் எதிா்ப்பு தெரிவித்து வருகின்றனா். இந்தச் சட்டத்திருத்தம் படைப்பாளிகளின் கருத்து சுதந்திரத்திற்கு எதிரான அச்சுறுத்தலாக மாறிவிடும் என்று அவா்கள் கூறுகின்றனா். இதற்கு எதிராகப் பிரதான திரைப்பட தயாரிப்பாளா் சங்கங்கள் கூட்டாக தீா்மானம் நிறைவேற்றியுள்ளன.

ஒளிப்பதிவு திருத்த மசோதாவுக்குத் தமிழக முதல்வர் ஸ்டாலின் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். கருத்துச் சுதந்திரத்தைப் பறிப்பது ஜனநாயகத்தை வலுவிழக்கச் செய்யும்; அது அரசியலமைப்புச் சட்டத்துக்கே எதிரானது. ஒளிப்பதிவு வரைவு மசோதாவைத் திரும்பப் பெற வேண்டும் என்று மத்திய சட்டத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சா் பிரகாஷ் ஜாவடேகா் ஆகியோருக்குத் இன்று கடிதம் எழுதியுள்ளார். 

இதையடுத்து தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்து தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:

ஒளிப்பதிவு திருத்த மசோதாவால் கருத்துச் சுதந்திரம் பறிபோவது இல்லாமல், தயாரிப்பாளர்கள் அதனால் எந்த அளவுக்குப் பாதிக்கப்படுவார்கள் என்பதைச் சுட்டிக்காட்டி நேற்றைய தினம் தமிழக முதல்வரிடம் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் கோரிக்கை மனு அளித்தோம்.

பல்வேறு அரசுப்பணிகளுக்கிடையிலும் தமிழ்த் திரையுலகைக் காத்திட மேற்படி கோரிக்கையை ஏற்று உடனடியாகத் திரையுலகுக்கு ஆதரவு தெரிவித்து தமிழக அரசின் நிலைப்பாட்டினை எடுத்துக்கூறி தமிழக முதல்வர் இன்று அறிக்கை வெளியிட்டுள்ளார். அதற்கு தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பாக மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறோம் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com