விக்ரம் வேதாவை ஹிந்தியில் இயக்கும் புஷ்கர் - காயத்ரி
விக்ரம் வேதா படம் ஹிந்தியில் ரீமேக் ஆகிறது. தமிழில் இப்படத்தை இயக்கிய புஷ்கர் காயத்ரி ஆகிய இருவரும்...


விஜய் சேதுபதி - மாதவன் நடிப்பில் புஷ்கர் காயத்ரி இயக்கத்தில் உருவான விக்ரம் வேதா படம் 2017-ல் வெளியாகி பெரிய வெற்றியைப் பெற்றது. தயாரிப்பு - சஷிகாந்தின் ஒய்நாட் ஸ்டூடியோஸ். வரலட்சுமி, ஷ்ரத்தா ஸ்ரீநாத் ஆகியோர் கதாநாயகிகளாக நடித்தார்கள். இசை - சாம் சி.எஸ்.
விக்ரம் வேதா படம் ஹிந்தியில் ரீமேக் ஆகிறது. தமிழில் இப்படத்தை இயக்கிய புஷ்கர் காயத்ரி ஆகிய இருவரும் ஹிந்தியிலும் இயக்குகிறார்கள். ஹிர்திக் ரோஷன் - சயிஃப் அலி கான் ஆகிய இருவரும் கதாநாயகர்களாக நடிக்கிறார்கள்.
அடுத்த மாதம் முதல் படப்பிடிப்பு தொடங்குகிறது. 2022 செப்டம்பர் 30 அன்று படம் வெளியாகும் எனத் தகவல்கள் தெரிவித்துள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...