வாக்காளர் பட்டியலில் இப்போதுகூட பெயர் சேர்க்கலாம்! தலைமைத் தேர்தல் ஆணையர் தகவல்ஜெயலலிதா வாழ்நாள் முழுவதும் எதிர்த்த கட்சியில் ஓபிஎஸ்: தமிழிசை கடும் விமர்சனம்!தில்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கு: கேஜரிவால், சிசோடியா விடுவிப்பு! சர்வாதிகாரி பழனிசாமி இனி எந்தக் காலத்திலும் வெற்றி பெறமாட்டார்: ஓபிஎஸ் காட்டம்!அன்பானவர், பண்பானவர் ஓபிஎஸ்; திமுக கூட்டணியில் ஜனநாயக சக்திகள்! - மு.க. ஸ்டாலின்எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் ஓ. பன்னீர்செல்வம்! திமுக துணைப் பொதுச் செயலாளர் ஓபிஎஸ்? போடியில் மீண்டும் போட்டி? திமுகவில் இணைந்தார் ஓ. பன்னீர்செல்வம்! ஆடம்பரத்தைத் தவிர்த்திடுவீர்! பிறந்த நாளையொட்டி கட்சியினருக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுரை! சட்டப்பேரவைத் தோ்தல்: அமலாக்கத் துறை தலைமை இயக்குநா் இன்று ஆலோசனை
/

நடிகர் சூர்யா தயாரிப்பில் ஹிந்தியில் உருவாகும் சூரரைப் போற்று

தமிழில் இப்படத்தை இயக்கிய சுதா கொங்கரா, ஹிந்தியிலும் இயக்கவுள்ளார்.

News image
Updated On :28 ஜனவரி 2024, 3:37 am

DIN

சூர்யா நடிப்பில் இறுதிச்சுற்று சுதா கொங்கராவின் இயக்கத்தில் உருவான சூரரைப் போற்று படம் கடந்த வருடம் தீபாவளிக்கு அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியானது. சூரரைப் போற்று, சூர்யாவின் 38-வது படம். கதாநாயகியாக மலையாள நடிகை அபர்ணா பாலமுரளி நடித்தார். இசை - ஜி.வி. பிரகாஷ். ஒளிப்பதிவு - நிகேத் பொம்மிரெட்டி. படம் ஏர் டெக்கான் நிறுவனர் கேப்டன் கோபிநாத்தின் சுயசரிதையான சிம்ப்ளி ஃப்ளையைத் தழுவி எடுக்கப்பட்டது. 

சினிமா தகவல்களை உள்ளடக்கிய புகழ்பெற்ற இணையத்தளம் ஐஎம்டிபி. இதில் உலகளவில் அதிகப் புள்ளிகளைப் பெற்ற 1000 படங்களின் ஐஎம்டிபி தரவரிசையில் சூரரைப் போற்று படம் 3-ம் இடம் பிடித்து சாதனை செய்தது.

இந்நிலையில் சூரரைப் போற்று படம் ஹிந்தியில் ரீமேக் ஆகிறது. தமிழில் இப்படத்தை இயக்கிய சுதா கொங்கரா, ஹிந்தியிலும் இயக்கவுள்ளார். சூர்யாவும் பாலிவுட் தயாரிப்பாளர் விக்ரம் மல்ஹோத்ராவும் இணைந்து ஹிந்தி ரீமேக்கைத் தயாரிக்கிறார்கள். 

சூரரைப் போற்று படத்துக்கு ரசிகர்கள் அமோக வரவேற்பு அளித்தார்கள். இந்தக் கதையைக் கேட்ட மறுநொடியே இது இந்திய அளவில் கொண்டு செல்லப்படவேண்டும் என நினைத்தேன் என்று ஹிந்தி ரீமேக் பற்றி சூர்யா கூறியுள்ளார். தமிழில் கிடைத்த வரவேற்பு ஹிந்தியில் கிடைக்கும் என நம்புவதாக சுதா கொங்கரா தெரிவித்துள்ளார்.

சூரரைப் போற்று ஹிந்தி ரீமேக் படத்தில் நடிக்கும் நடிகர்கள் பற்றிய விவரங்கள் விரைவில் வெளியிடப்படவுள்ளன. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.