ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கைஅல்-காய்தா, ஐஎஸ் அமைப்புகளுக்கு எதிராக கூட்டு நடவடிக்கை: ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்தல்பல்வேறு துறைகளைச் சோ்ந்த ஆளுமைகளுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று கலந்துரையாடல்சீனாவின் பாதுகாப்பு பட்ஜெட் 7% உயா்வுமத்திய கிழக்கு போா் : இந்தியாவில் யூரியா உற்பத்தி சரிவு: உர விலை உயரும் அபாயம்?
/

ஏ.ஆர்.ரஹ்மானை யாரென்று கேட்ட நடிகர் பாலகிருஷ்ணா ? - கடுமையாக விமரிசித்த ரசிகர்கள்

ஒரு நேர்காணலில் தனக்கு ஏ.ஆர்.ரஹ்மான் யாரென்று தெரியாது என நடிகர் பாலகிருஷ்ணா பேசியிருப்பது பெரும் சர்ச்சைக்குள்ளாகியுள்ளது. 

News image
Updated On :22 ஜூலை 2021, 6:54 am

DIN

ஒரு நேர்காணலில் தனக்கு ஏ.ஆர்.ரஹ்மான் யாரென்று தெரியாது என நடிகர் பாலகிருஷ்ணா பேசியிருப்பது பெரும் சர்ச்சைக்குள்ளாகியுள்ளது. 

பிரபல தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா சமீபத்தில் ஒரு நேர்காணலில் ஏ.ஆர்.ரஹ்மான் யார் என்றே தெரியாது என்று தெரிவித்திருக்கிறார். மேலும் இந்தியாவின் உயரிய விருதான பாரத ரத்னா விருது பற்றியும் தவறான கருத்து தெரிவித்ததாக கூறப்படுகிறது. 

ஆஸ்கர் என்ற உயரிய விருதுபெற்ற, உலக அளவில் புகழ்பெற்ற இந்தியரான ஏ.ஆர்.ரஹ்மானை, யாரென்றே தெரியாது என்று பாலகிருஷ்ணா தெரிவித்திருப்பது, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. இதனையடுத்து ஏ.ஆர்.ரஹ்மானின் ரசிகர்கள் பாலகிருஷ்ணாவை சுட்டுரையில் 'யார் அந்த பாலகிருஷ்ணா?' என்ற ஹாஷ்டாக் மூலம் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். 

Story image

இதனையடுத்து பாலகிருஷ்ணாவின் ரசிகர்கள், அவருக்கு ஆதரவாக களமிறங்கியுள்ளனர். அவரது சாதனைகள், பொது சேவைகள் ஆகியவற்றைப அவர்கள் பட்டியலிட்டு வருகின்றனர். மேலும் ஒரு நிகழ்ச்சியில் சூர்யா உள்ளிட்ட பிரபலங்கள் பாலகிருஷ்ணாவை நேசிப்பதாகக் கூறியதை மேற்கோள் காட்டி, யார் இந்த பாலகிருஷ்ணா என்று இப்பொழுது தெரிகிறதா? என்று கேள்வி எழுப்பி வருகின்றனர். 

Story image


 
முன்னதாக ஏ.ஆர்.ரஹ்மான் 1993 ஆம் ஆண்டு பாலகிருஷ்ணாவின் நடிப்பில் வெளியான 'நிப்பு ராவா' என்ற படத்துக்கு பின்னணி இசையமைத்திருக்கிறார். இருந்தும் ஏ.ஆர்.ரஹ்மான் யாரென்று தெரியாது என பாலகிருஷ்ணா தெரிவித்திருப்பது ரசிகர்களுக்கு வியப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏ.ஆர்.ரஹ்மான் குறித்து ஏற்கனவே அவருக்கு கசப்பான அனுபவம் இருந்திருக்கலாம், அதன் காரணமாகவே அவர் அப்படி பேசியிருக்கக்கூடும் என ஒரு சிலர் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.