ஆத்தங்கர மரமே பாடலைப் பாடி ரசிகர்களின் பாராட்டைப் பெற்ற நடிகை கனிகா (விடியோ)
ஏ.ஆர். ரஹ்மான் இசையமைப்பில் கிழக்குச் சீமையிலே படத்தில் இடம்பெற்ற ஆத்தங்கர மரமே...


ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்த ஆத்தங்கர மரமே பாடலைப் பாடி ரசிகர்களின் பாராட்டைப் பெற்றுள்ளார் நடிகை கனிகா.
தமிழ்ப் பெண்ணான கனிகா, 2002-ல் ஃபைவ் ஸ்டார் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். 2009-க்குப் பிறகு ஏராளமான மலையாளப் படங்களில் அவர் நடித்துள்ளார். சமீபகாலமாக தமிழில் யாதும் ஊரே யாவரும் கேளிர், கோப்ரா போன்ற படங்களில் நடித்துள்ளார்.
இன்ஸ்டகிராமில் தொடர்ந்து விடியோக்களையும் புகைப்படங்களையும் கனிகா பதிவு செய்து வருகிறார். இந்நிலையில் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைப்பில் கிழக்குச் சீமையிலே படத்தில் இடம்பெற்ற ஆத்தங்கர மரமே பாடலைப் பாடி அதன் விடியோவை இன்ஸ்டகிராமில் வெளியிட்டுள்ளார். இதற்காக கனிகாவுக்கு ரசிகர்கள் பாராட்டுகளைத் தெரிவித்துள்ளார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...