ஈஷா யோக மையத்தின் மஹா சிவராத்திரி விழாவில் கலந்துகொண்ட நடிகை சமந்தா (படங்கள்)
நடிகைகள் ரகுல் ப்ரீத் சிங், லட்சுமி மஞ்சு போன்றோருடன் விழாவில் கலந்துகொண்ட புகைப்படங்களை...


ஈஷா யோக மையத்தின் மஹா சிவராத்திரி விழாவில் நடிகைகள் சமந்தா, ரகுல் ப்ரீத் சிங், லட்சுமி மஞ்சு போன்றோர் கலந்துகொண்டார்கள்.
கோவை, ஈஷா யோக மையத்தில் ஆண்டுதோறும் லட்சக்கணக்கானோா் பங்கேற்கும் மஹா சிவராத்திரி விழா வெகு விமரிசையாக நடைபெறும். இந்நிகழ்ச்சியில் முக்கிய பிரமுகா்கள், சினிமா பிரபலங்களும் கலந்துகொள்வா். தவிர உள்ளூா் பக்தா்கள் மட்டுமின்றி பிற மாநிலங்கள், வெளி நாடுகளைச் சோ்ந்த பக்தா்களும் பங்கேற்பா்.
கோவை, ஈஷா யோக மையத்தில் ஈஷா நிறுவனா் சத்குரு ஜக்கி வாசுதேவ் முன்னிலையில் மஹா சிவராத்திரி விழா நடைபெற்றது.
இந்த வருட விழாவில் பிரபல நடிகை சமந்தா கலந்துகொண்டார். நடிகைகள் சமந்தா, ரகுல் ப்ரீத் சிங், லட்சுமி மஞ்சு போன்றோர் விழாவில் கலந்துகொண்ட புகைப்படங்கள் இன்ஸ்டகிராம் தளத்தில் வெளியாகியுள்ளன. இந்த இரவை மறக்க முடியாது என மஹா சிவராத்திரி விழா பற்றி இன்ஸ்டகிராமில் குறிப்பிட்டுள்ளார் சமந்தா. கடந்த சில வருடங்களில் நடைபெற்ற மஹா சிவராத்திரி விழாவில் நடிகைகள் காஜல் அகர்வால், தமன்னா, அதிதி ராவ் போன்றோர் கலந்துகொண்டார்கள்.



தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...